UPDATED : டிச 22, 2015 12:00 AM
ADDED : டிச 22, 2015 12:24 PM
மதுரை:
மதுரை காமராஜ் பல்கலை உடற்கல்வி துறையை
மேம்படுத்தும் வகையில், பல்கலை மானிய குழு (யு.ஜி.சி.,) ரூ.2.4 கோடி ஒதுக்கியுள்ளது.
விளையாட்டுக்களின் நுணுக்கங்கள்,
சமீபத்திய நிகழ்வுகள், நவீன உபகரணங்கள், ஆய்வகங்களுக்காக
இத்தொகை வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து
துறைத்தலைவர் சந்திரசேகர் கூறியது:
பல்கலையில் இத்துறையில் எம்.பி.எட்., மற்றும்
எம்.பில்., பிஎச்.டி., படிப்புகள் உள்ளன. பிட்னஸ் மையத்துடன் விளையாட்டு அறிவியலை
மேம்படுத்தும் வகையில், இத்திட்டம் யு.ஜி.சி.,யால் செயல் படுத்தப்படுகிறது. ரூ.1.3 கோடியில் ஆய்வகங்கள், பிட்னஸ் மையம்
கட்டுவதற்கும், ரூ.1.1 கோடியில் கருவிகள் வாங்கவும், உள்கட்டுமான அமைப்பிற்கும்
திட்டமிடப்பட்டுள்ளது.
தரைத்தளத்தில்
ஆடவர், மகளிருக்கான பிட்னஸ் மையம் அமைக்கப்படும். முதல் தளத்தில் சோதனை
மற்றும் அளவிடுதல், உடற்பயிற்சி உடற்செயலியல் ஆய்வகம், விளையாட்டு மருத்துவம், உளவியல், பயோமெக்கானிக்ஸ்
மற்றும் கம்யூனிகேஷன் டெக்னாலஜி ஆய்வகங்கள் அமைக்கப்படுகின்றன.
தேசிய ஆசிரிய
கல்விக்கான கவுன்சில் மற்றும் யு.ஜி.சி., வழிகாட்டுதல்படி மையம்
அமைக்கப்படுகிறது. முதல் தவணையாக ரூ.1.2 கோடி வழங்கப்பட்டுள்ளது. கட்டுமான
ஆயத்தப்பணி துவங்கியுள்ளது. மையம் மூலம் ஆய்வு மாணவர்களின் திறன் மேம்படும், என்றார்.
