தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/காமராஜர் பல்கலைக்கு எதிராக யு.ஜி.சி., பிறப்பித்த உத்தரவுக்கு தடை

காமராஜர் பல்கலைக்கு எதிராக யு.ஜி.சி., பிறப்பித்த உத்தரவுக்கு தடை

காமராஜர் பல்கலைக்கு எதிராக யு.ஜி.சி., பிறப்பித்த உத்தரவுக்கு தடை


UPDATED : டிச 22, 2015 12:00 AM

ADDED : டிச 22, 2015 04:18 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 22, 2015 12:00 AM ADDED : டிச 22, 2015 04:18 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை காமராஜர் பல்கலையின் அதிகார எல்லையை தவிர்த்து, பிற பகுதிகளிலுள்ள தொலைநிலைக் கல்வி மையங்களை மூட வேண்டும் என்ற பல்கலை மானியக்குழு உத்தரவிற்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தடை விதித்தது.

மாணவர் சேர்க்கை

மதுரை காமராஜர் பல்கலை பதிவாளர் முத்துமாணிக்கம் தாக்கல் செய்த மனு:

மதுரை காமராஜர் பல்கலை மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர் மாவட்டங்களை அதிகார எல்லையாக கொண்டுள்ளது. இங்கு பல்கலை இணைவிப்பு பெற்ற கல்லூரிகள் உள்ளன. 1995 முதல் தொலைநிலைக் கல்வி மையங்கள் மூலம், தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்கள், வெளிநாடுகளில் மாணவர் சேர்க்கை நடக்கிறது.

சத்தீஸ்கரில் ஒரு பல்கலை, விதிகளுக்கு புறம்பாக பல்வேறு கல்வி மையங்களுக்கு அனுமதியளித்ததை ரத்து செய்ய வேண்டும் என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் அடிப்படையில், ஆக., 12ல் யு.ஜி.சி.,பல்கலை மானியக்குழு செயலர் எங்களுக்கு கடிதம் எழுதினார். அதில், பல்கலையின் அதிகார எல்லையை தவிர்த்து, பிற பகுதிகளில் செயல்படும் தொலைநிலைக் கல்வி மையங்களில், மாணவர் சேர்க்கை நடத்தக்கூடாது; மூட வேண்டும் என உள்ளது. சத்தீஸ்கர் பல்கலை வழக்கில், பல்கலையின் கீழ் நேரடியாக செயல்படும் கல்வி மையங்களை மூட வேண்டும் என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதில், தொலைநிலைக் கல்வி மையங்கள் பற்றி எதுவும் இல்லை.

1.20 லட்சம் பேர் பாதிப்பு

எங்கள் அதிகார எல்லைக்குட்பட்ட பகுதிகளைத் தவிர, பிற பகுதிகளில் நேரடியாக கல்லூரிகள் நடத்தவில்லை. உச்ச நீதிமன்ற உத்தரவை யு.ஜி.சி., தவறாக புரிந்து கொண்டு, பிற பகுதிகளில் உள்ள தொலைநிலைக் கல்வி மையங்களில் மாணவர் சேர்க்கை நடத்தக்கூடாது உத்தரவிட்டுள்ளது. இதனால், அம்மையங்கள் மூலம் படிக்கும், 1.20 லட்சம் பேரின் கல்வி பாதிக்கும். யு.ஜி.சி., உத்தரவிற்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு, முத்துமாணிக்கம் மனு செய்திருந்தார். இதை விசாரித்த நீதிபதி டி.ஹரிபரத்தானம், யு.ஜி.சி.,உத்தரவிற்கு தடை விதிக்கப்படுகிறது, என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us