UPDATED : டிச 23, 2015 12:00 AM
ADDED : டிச 23, 2015 10:49 AM
திருப்பூர்
: திருப்பூரில், அரசு பள்ளிகளுக்கு, நாளை முதல், ஒன்பது நாட்களுக்கு விடுமுறை
அளிக்கப்படுகிறது.
வரும் ஜன., மாதம், பள்ளிகளில் அரையாண்டு தேர்வு நடைபெற உள்ளது. ஆண்டுதோறும், டிச., மாதம் அரையாண்டு தேர்வு நடத்தப்பட்டு, மாத இறுதியில், 10 நாட்கள் வரை, விடுமுறை அளிப்பது வழக்கம். அதே முறையை பின்பற்றி, கல்வியாண்டு நாள்காட்டி அடிப்படையில், நாளை (24) முதல், ஜன., 1 வரை, ஒன்பது நாட்களுக்கு, அனைத்து அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது.
பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவ, மாணவியருக்கு மட்டும், 28, 29 மற்றும், 30ல், சிறப்பு வகுப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகளுக்கு, 24 முதல் ஜன., 3 வரை, 11 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஜன., 4ல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என, தனியார் பள்ளி நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்
