தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/குரூப் - 1 தேர்வு; 4 மாதங்களில் முடிவு

குரூப் - 1 தேர்வு; 4 மாதங்களில் முடிவு

குரூப் - 1 தேர்வு; 4 மாதங்களில் முடிவு


UPDATED : டிச 24, 2015 12:00 AM

ADDED : டிச 24, 2015 10:59 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 24, 2015 12:00 AM ADDED : டிச 24, 2015 10:59 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தகுதி தேர்வுமதுரையைச் சேர்ந்த கார்த்திக் ராஜா என்பவர் தாக்கல் செய்த மனு:

கடந்த, 2014 ஏப்ரலில் நடந்த, குரூப் 1 தேர்வின் முடிவு, 2015 ஜனவரியில் வெளியிடப்பட்டது. மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம், ஆண்டுதோறும் தேர்வு நடத்தி, ஒரு மாதத்திற்குள், முதல் நிலை தகுதி தேர்வு முடிவை வெளியிடுகிறது.

தமிழக அரசு பணியாளர்கள் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., பெருமளவு தொகையை முதலீடு செய்து, விடைத்தாள்களை திருத்துவதற்கு வசதிகள் செய்துள்ளன. அதனால், முதல் நிலை தேர்வின் முடிவை, ஒரு மாதத்திற்குள் வெளியிட முடியும். எனவே, 2015, நவம்பரில் நடந்த, குரூப் 1 முதல் நிலை தகுதி தேர்வின் முடிவை, ஒரு மாதத்திற்குள் வெளியிடும்படி, டி.என்.பி.எஸ்.சி.,க்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

மனு, நீதிபதி கல்யாணசுந்தரம் முன், விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர் சிலம்பண்ணன், வழக்கறிஞர் புருஷோத்தமன் ஆஜராகினர். டி.என்.பி.எஸ்.சி., தரப்பில், வழக்கறிஞர் நிறைமதி ஆஜராகி, நான்கு மாதங்களுக்குள், முதல் நிலை தகுதி தேர்வின் முடிவை வெளியிடுவதாக தெரிவித்தார்.

உத்தரவு

டி.என்.பி.எஸ்.சி., வழக்கறிஞரின் வாதத்தை பதிவு செய்த நீதிபதி கல்யாணசுந்தரம், நான்கு மாதங்களுக்குள், முதல் நிலை தகுதி தேர்வின் முடிவை வெளியிடும் படி, டி.என்.பி.எஸ்.சி.,க்கு, உத்தரவிட்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us