தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அரசு கல்லூரிகளில் மீண்டும் சிறப்பு வகுப்பு

அரசு கல்லூரிகளில் மீண்டும் சிறப்பு வகுப்பு

அரசு கல்லூரிகளில் மீண்டும் சிறப்பு வகுப்பு


UPDATED : டிச 26, 2015 12:00 AM

ADDED : டிச 26, 2015 11:00 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 26, 2015 12:00 AM ADDED : டிச 26, 2015 11:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மை மாணவர்கள், கணிதம், அறிவியல் மற்றும் ஆங்கிலப் பாடங்களில் பின் தங்கியிருப்பதை, பல்கலை மானிய குழுவான, யூ.ஜி.சி., கண்டறிந்தது. இதையடுத்து சிறப்பு வகுப்புகள் நடத்தி, அந்த மாணவர்களை முன்னேற்ற, பேராசிரியர்களுக்கு கூடுதலாக, 10 ஆயிரம் ரூபாய் ஊதியம் அளிக்க அரசு உத்தரவிட்டது. 

இதன்படி, 2012 வரை சிறப்பு வகுப்புகள் நடந்தன. இதற்கான நிதியில் முறைகேடு நடப்பதாக புகார் எழுந்தது. அதனால், மூன்று ஆண்டுகளாக இந்த நிதி நிறுத்தப்பட்டு, சிறப்பு வகுப்புகள் நடக்கவில்லை. மீண்டும் வகுப்புகள் நடத்த நிதி தருவதாக, உயர் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன் படி, ஒவ்வொரு பேராசிரியரும், வாரம்தோறும் கூடுதலாக, ஒரு மணி நேரம் பாடம் நடத்த வேண்டும். இந்த வகுப்பை, சனி, ஞாயிறு நடத்த வேண்டும் என, மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us