தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு ’ஜெயித்து காட்டுவோம்’ நிகழ்ச்சி

மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு ’ஜெயித்து காட்டுவோம்’ நிகழ்ச்சி

மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு ’ஜெயித்து காட்டுவோம்’ நிகழ்ச்சி


UPDATED : டிச 29, 2015 12:00 AM

ADDED : டிச 29, 2015 10:16 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 29, 2015 12:00 AM ADDED : டிச 29, 2015 10:16 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை பல்கலைக் கழகத்தில், காலை, 8:30 மணிக்கு, 10ம் வகுப்பு மாணவர்களுக்கான நிகழ்ச்சி நடைபெறும். இந்த நிகழ்ச்சியில், கணித ஆசிரியர் பவானி; அறிவியல் ஒன்று - ஆசிரியர் ரேகா யஷ்வந்த்; அறிவியல் இரண்டு - ஆசிரியர் சாந்தி பிரபுராம்; ஆங்கில ஆசிரியர் முனிராமையா; சமூக அறிவியல் ஒன்று - ஆசிரியர் ரஜினிபால்; சமூக அறிவியல் இரண்டு - ஆசிரியர் சந்திரகலா; தமிழாசிரியை சுப்புலட்சுமி ஆகியோர், பொதுத் தேர்வில், நுாற்றுக்கு நுாறு மதிப்பெண் எடுப்பது எப்படி என விளக்க உள்ளனர். கல்வியாளர் ரமேஷ் பிரபாதன்னம்பிக்கையுடன் தேர்வை எதிர்கொள்வது எப்படிஎன, விளக்க உள்ளார்.

பகல், 1:00 மணிக்கு, பிளஸ் 2அறிவியல் பிரிவு மாணவ, மாணவியருக்கான நிகழ்ச்சி நடைபெறும். இயற்பியல் ஆசிரியர் கோபி ஆனந்த்; வேதியியல் ஆசிரியர் சரவணன்; கணித ஆசிரியர் ராஜ்; கம்ப்யூட்டர் அறிவியல் ஆசிரியர் ரமேஷ்; உயிரியல் ஆசிரியர் சேகர், ஆகியோர், ஒவ்வொரு பாடத்திலும், நுாற்றுக்கு நுாறு மதிப்பெண் எடுக்கும் வழிமுறையை விளக்குவர்.

ஐ.ஏ.எஸ்., அதிகாரி இறையன்பு, தேர்வில் தேர்ச்சி பெற வேண்டிய வழிமுறைகளை விளக்க உள்ளார். காலை மற்றும் மாலை நடக்கும் நிகழ்ச்சிகளில், தினமலர் ஆசிரியர் டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தி கலந்து கொண்டு, கடந்த ஆண்டு அரசு பொதுத் தேர்வில், அதிக மதிப்பெண் எடுத்த மாணவ, மாணவியருக்கு பரிசு வழங்கி, வாழ்த்துரை வழங்க உள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us