தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஆந்திரா; தலைமையாசிரியர் சஸ்பெண்ட்

ஆந்திரா; தலைமையாசிரியர் சஸ்பெண்ட்

ஆந்திரா; தலைமையாசிரியர் சஸ்பெண்ட்


UPDATED : டிச 29, 2015 12:00 AM

ADDED : டிச 29, 2015 10:25 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 29, 2015 12:00 AM ADDED : டிச 29, 2015 10:25 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆந்திராவில், பழங்குடியினர் உறைவிடப் பள்ளியில் படித்த, மாணவிக்கு உரிய நேரத்தில் மருத்துவச் சிகிச்சை தராததால், அவள் இறந்தாள். இதனால், மாணவி படித்த பள்ளியின் தலைமையாசிரியர், சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். 

குறிப்பிட்ட மாணவி, டிச., 21 முதல், காய்ச்சல் மற்றும் வாந்தியால் அவதிப்பட்டுள்ளாள். இது பற்றி, அவளின் பெற்றோருக்கோ, மருத்துவர்களுக்கோ, பள்ளி நிர்வாகம் தகவல் தெரிவிக்கவில்லை. உடன் படிக்கும் மாணவர்கள் மூலம் தகவல் அறிந்த மாணவியின் பெற்றோர், பள்ளிக்குச் சென்று, தங்கள் குழந்தையை மருத்துவமனையில் சேர்க்க ஏற்பாடு செய்தனர். இருந்தும், மாணவி சிகிச்சை பலனின்றி இறந்தாள்.

இந்த விஷயத்தில் கவனக்குறைவாகச் செயல்பட்டதால், பள்ளியின் தலைமையாசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us