UPDATED : டிச 29, 2015 12:00 AM
ADDED : டிச 29, 2015 10:32 AM
அ நிறம் | அளவு
பல்கலை விதிகளை மீறாமல், தகுதியான பேராசிரியர்களை நியமித்து, மத்திய அரசுக்கு அறிக்கை அளிக்க வேண்டும் என, பல்கலை மானிய குழு - யு.ஜி.சி., துணை தலைவர் தேவராஜ் தெரிவித்துள்ளார்.
சென்னை, அண்ணா பல்கலையில், அவர் அளித்த பேட்டி:
பல்கலைகளில், யு.ஜி.சி., விதிகளின் படி, தகுதியான பேராசிரியர்களை நியமிக்க, பலமுறை அறிவுறுத்தி உள்ளோம். ஆனால், யு.ஜி.சி.,க்கு தெரியாமல், பல்கலைகளில் பேராசிரியர்கள் நியமிக்கப்பட்டு, விதிமீறல் நடந்துள்ளது. அந்த பல்கலைகளுக்கு, நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதுகுறித்து, சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை பின்பற்றி, பல்கலைகள், பேராசிரியர் நியமனம் குறித்து, யு.ஜி.சி.,க்கு அறிக்கை அளிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
