UPDATED : டிச 31, 2015 12:00 AM
ADDED : டிச 31, 2015 11:18 AM
திண்டுக்கல்
: தென்கிழக்கு ஆசியப்போட்டியில் பங்கேற்ற திண்டுக்கல் மாணவன்
கராத்தேயில் சாதனை படைத்துள்ளார்.
திண்டுக்கல் எஸ்.பி.எம்., பள்ளியில் ஆறாம் வகுப்பு படிப்பவர், முகமது காசிம்,11. கடந்த டிச.26,27ல் சென்னையில் நடந்த தென்கிழக்கு ஆசிய போட்டிகளில் பங்கேற்றார். இதில் 11 வயதிற்குட்பட்டோருக்கான பிரிவில் கராத்தே கட்டா ஸ்பேரிங்க் போட்டியில் 2வது இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார் .தென்கிழக்கு ஆசிய கராத்தே போட்டியில் சாதனை படைத்த மாணவன் ஏ.முகமது காசிமை, பட்டேல் கல்வி குழுமத்தினர் பாராட்டினர்.
இதில் கால்பந்து கழக செயலாளர் சண்முகம், பட்டேல் கல்வி விளையாட்டுக்குழு நிறுவனர் ரமேஷ், எஸ்.பி.எம்., பள்ளி தாளாளர் ஜெயராஜ், தமிழ்நாடு ஹாக்கி சங்க துணை தலைவர் ஞானகுரு, உறுப்பினர் அப்துல்நாசர் பங்கேற்றனர். வரும் ஜனவரி லண்டனில் நடக்கும் உலகளவிலான போட்டியில் மாணவன் பங்கேற்க உள்ளார்.
