UPDATED : ஜன 02, 2016 12:00 AM
ADDED : ஜன 02, 2016 11:17 AM
அ நிறம் | அளவு
இவர்களின் ஆவணங்களை, லாஸ்ஏஞ்சல்ஸ் விமான நிலைய குடியுரிமைத் துறை அதிகாரிகள் சோதனையிட்டதில், அதில் குறிப்பிடப்பட்டு இருந்த பல்கலைக் கழகங்கள், அமெரிக்க அரசின் அங்கீகாரம் பெறாதது என தெரிய வந்தது.
இதையடுத்து, 21 மாணவர்களும், மீண்டும் சென்னைக்கே திருப்பி அனுப்பப்பட்டனர். இவர்கள், நேற்று காலை, 5:30 மணிக்கு, பிரிட்டீஷ் ஏர்வேஸ் விமானத்தில் சென்னை வந்தனர். அவர்களிடம், சென்னை விமான நிலைய குடியுரிமைத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். பின், மாணவர்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டுச் சென்றனர்.
