UPDATED : ஜன 02, 2016 12:00 AM
ADDED : ஜன 02, 2016 11:26 AM
விழுப்புரம்
:
மயிலம் பொறியியல் கல்லூரியில், நேர்முக வளாகத் தேர்வு நடந்தது.
சென்னை
சதர்லேண்ட் குலோபல் சர்வீசஸ் நிறுவனம் சார்பில், மயிலம் பொறியியல் கல்லூரியில் நேர்முக
வளாகத் தேர்வு நடந்தது. கல்லூரி தலைவர் தனசேகர் தலைமை தாங்கினார். துணை தலைவர்
சுகுமாறன், செயலாளர் நாராயணசாமி கேசவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி
முதல்வர் செந்தில் வரவேற்றார். டீன் ராஜப்பன் வாழ்த்தி பேசினார்.
இதில், இளங்கலை
பிரிவில் இறுதியாண்டு படிக்கும் மாணவர்கள், இறுதியாண்டு கம்ப்யூட்டர் பயன்பாட்டுத்
துறை மாணவர்கள் உள்ளிட்ட 150க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். குழு விவாதம், தொலைபேசி மூலம்
நேர்முகத் தேர்வு என இரண்டு சுற்றுகளாக நடந்த தேர்வில், 50 பேர் தேர்வு
செய்யப்பட்டனர். வேலைவாய்ப்புத் துறை ஒருங்கிணைப்பாளர்கள், முகாமிற்கான
ஏற்பாடுகளை செய்திருந்தனர். பயிற்சி மற்றும் வேலை வாய்ப்பு அலுவலர் சதீஷ்குமார்
நன்றி கூறினார்.
