UPDATED : ஜன 02, 2016 12:00 AM
ADDED : ஜன 02, 2016 11:39 AM
அ நிறம் | அளவு
திருவள்ளூர்
: வெள்ளத்தால்
பாதிக்கப்பட்ட, 10 மற்றும் பிளஸ் 2 வகுப்பு மாணவியருக்கு, கற்றல் கையேடுகள்
வழங்கப்பட்டன.
திருவள்ளூர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாணவியருக்கு கற்றல் கையேடு வழங்கும் நிகழ்ச்சி, ஆர்.எம்.ஜெயின் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நேற்று நடந்தது.
பள்ளி தலைமை ஆசிரியை மேரி தலைமை வகித்தார். முதன்மை கல்வி அலுவலர் சீதாலட்சுமி, 10 மற்றும் பிளஸ் 2 வகுப்பு மாணவியருக்கு கற்றல் கையேடுகளை வழங்கி பேசினார். நிகழ்ச்சியில், மாவட்ட கல்வி அலுவலர்கள் மோகன சந்திரன், மலர்விழி, பள்ளி துணை ஆய்வாளர் ராமமூர்த்தி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
