UPDATED : ஜன 04, 2016 12:00 AM
ADDED : ஜன 04, 2016 10:38 AM
மதுரை
: மதுரை
மாவட்டத்தில் 100 அரசு பள்ளிகளில் இந்தாண்டிற்குள் 100 மூலிகை தோட்டங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மூன்று கல்வி மாவட்டங்களில் 250 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பசுமைப்படை இயக்கம் செயல்படுகின்றன. ஒவ்வொரு பள்ளியிலும் 50 மாணவர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். மாநில சுற்றுச்சூழல் துறை சார்பில் ஆண்டிற்கு தலா ரூ.2500 ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
இதன் மூலம் பள்ளி வளாகங்களில் மூலிகை தோட்டம், மழைநீர் சேகரிப்பு மையம் உருவாக்குவது, பிளாஸ்டிக் ஒழிப்பு, ஓசோன், பல்லுயிர் பெருக்கம் உட்பட 16 வகை செயல்பாடுகள் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. 2015-16ம் ஆண்டில் சிறப்பாக செயல்படும் 43 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு, அதன் செயல்பாடுகளை மேம்படுத்த ரூ.7.60 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் 100 மூலிகை தோட்டங்கள் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
பசுமைப்படை
ஒருங்கிணைப்பாளர் குழந்தைவேலு கூறியதாவது:
தற்போது 15 அரசு பள்ளிகளில் மூலிகை தோட்டம், 20 பள்ளிகளில் மழை நீர் சேகரிப்பு மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளன. முதன்மை கல்வி அலுவலர் ஆஞ்சலோ இருதயசாமி ஒத்துழைப்புடன் இந்தாண்டில் 100 மூலிகை தோட்டங்கள் உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பிளாஸ்டிக் இல்லாத பள்ளி வளாகங்களை ஏற்படுத்தி, பசுமை வளாகங்களாக மாற்ற சுற்றுச்சூழல் மன்றங்களுடன் இணைந்து பல்வேறு நடவடிக்கை எடுக்கப்படுகிறது, என்றார்.
