தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அண்ணா பல்கலை தேர்வு ’அம்மா’ பெயரில் கேள்வி

அண்ணா பல்கலை தேர்வு ’அம்மா’ பெயரில் கேள்வி

அண்ணா பல்கலை தேர்வு ’அம்மா’ பெயரில் கேள்வி


UPDATED : ஜன 06, 2016 12:00 AM

ADDED : ஜன 06, 2016 10:55 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 06, 2016 12:00 AM ADDED : ஜன 06, 2016 10:55 AM


Follow on Google
அ நிறம் | அளவு

இதில், இரு தினங்களுக்கு முன், கணினி அறிவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப மாணவர்களுக்கு, குறியீடு மற்றும் இணைய பாதுகாப்பு குறித்த, கிரிப்டோக்ராபி மற்றும், நெட்வொர்க் செக்யூரிட்டி என்ற பாடத்தேர்வு நடந்தது.

இந்த பாடத்தை, கணினி அறிவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப பிரிவு மாணவர்கள் எழுதினர். மொத்தம், 100 மதிப்பெண்களுக்கான இந்த தேர்வில், முதல்கேள்வியே மாணவர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது. இரண்டு மதிப்பெண்களுக்கான அந்த கேள்வியில், அம்மா என்ற பெயரை, கணினி வழி குறியீடாக (என்கிரிப்ட்) மாற்றி எழுதுக என, குறிப்பிடப்பட்டிருந்தது.

இதுகுறித்து மாணவர்கள் கூறும்போது, தமிழக அரசியலில், அம்மா என, முதல்வர் ஜெயலலிதாவை, அவர் கட்சியினர் அழைக்கின்றனர்; அதிகாரிகளும் அப்படியே அழைக்கின்றனர். அதனால், இதுபோன்று கேள்வி தயாரிக்கப்பட்டுள்ளது குழப்பத்தை ஏற்படுத்தியது என்றனர்.

அண்ணா பல்கலை தரப்பினர் கூறுகையில், என்கிரிப்ட் தொழில்நுட்பத்தில், ஒரு பெயரை கணினி வழியே பாஸ்வேர்டாக மாற்ற, எந்த வார்த்தையையும் பயன்படுத்தலாம். அதற்கு, அம்மா என்ற பெயர் பயன்படுத்தப்பட்டுள்ளது; இதில் ஒன்றும் அரசியல் இல்லை என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us