UPDATED : ஜன 07, 2016 12:00 AM
ADDED : ஜன 07, 2016 10:47 AM
ஊத்தங்கரை
:
ஊத்தங்கரை ஸ்ரீவித்யா மந்திர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள், பல்கலைக்கழக பருவத்தேர்வில், 97.75 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
பெரியார் பல்கலைக்கழக தேர்வு முடிவுகளில், 352 பேர், 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளனர். கணித்துறையில், 99.72 சதவீதமும், பி.பி.ஏ(சி.ஏ) பிரிவில், 99.07 சதவீதம் தேர்ச்சி விகிதமும், பி.பி.ஏ. பிரிவில், 98.58 சதவீதமும், கணினி அறிவியல் துறையில், 98.54 தேர்ச்சியையும், பி.சி.ஏ., 98.22 சதவீத தேர்ச்சியையும் பெற்றுள்ளனர். இளங்கலை தமிழ் இலக்கியம் பிரிவில், 98.21 சதவீதமும், இளங்கலை பிரிவில் வேதியியல், 97.8 சதவீதம், இயற்பியல் துறை, 98.5, பி.காம்., 97.51, பி.காம்.(சி.ஏ), 96.68, விலங்கியல் பிரிவு, 95.75, ஆங்கிலம் பிரிவில், 93.35, தாவரவியல், 93 தேர்ச்சியை பெற்று சாதனை படைத்துள்ளனர். மூன்றாம் ஆண்டு கணிதப்பிரிவு மாணவி ஆயிஷா பேகம், நான்கு பாடங்களில், 100க்கு 100 மதிப்பெண்களையும், மாணவிகள் வள்ளி, கோதை நாயகி, சீதாலட்சுமி, கலா, கவிதா, மேகலா, தீபா, இனியா, ஆகியோர் மூன்று பாடங்களில், 100க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர்.
40 மாணவர்கள், 2 பாடங்களிலும், 199 மாணவர்கள் ஒரு பாடத்திலும், 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். சார்பு பாடங்களாக கணிதத்தை பயின்றவர்களில், 39 மாணவர்கள், 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். இளங்கலை வேதியியல் முதன்மை பாடத்தில், 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு, கல்லூரி நிறுவனர் சந்திரசேகரன், முதல்வர் அருள், செயலர் செங்கோடன் மற்றும் பேராசிரியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
