UPDATED : ஜன 07, 2016 12:00 AM
ADDED : ஜன 07, 2016 10:48 AM
அ நிறம் | அளவு
புதுச்சேரி:
கல்லாடனார் கல்விக் கழகம் சார்பில்
திருக்குறள் மும்மொழி உரைநுால் வெளியீட்டு விழா, வரும் 10ம் தேதி காலை 9.30 மணிக்கு ஓட்டல் ஜெயராமில் நடக்கிறது.
கல்லாடனின் திருக்குறள் மும்மொழி உரைநுால்கள் வெளியீடு, கவிசித்தர் இளம்வழுதியின் படத் திறப்பு, சிறப்பு பள்ளி மாணவர்களுக்கு பரிசளிப்பு மற்றும் சிற்றிதழ்களுக்கு நிதியளிப்பு விழாவிற்கு புதிமம் தலைவர் பேராசிரியர் கலியன் எதிராசன் தலைமை தாங்குகிறார்.
ஓய்வு பெற்ற நீதியரசர் தாவீத்அன்னுசாமி, கல்லாடனின் திருக்குறள் மும்மொழி உரைநுால்களை வெளியிடுகிறார். முதல் நுாலை புதுச்சேரி பிரெஞ்சுக் கல்லுாரி முதல்வர் ஷார்ல் அலீன் பெற்றுக் கொள்கிறார். சமூக நலத்துறை இயக்குனர் மீனாகுமாரி சிறப்பு பள்ளி மாணவர்களுக்கு பரிசு வழங்குகிறார்.
