UPDATED : ஜன 12, 2016 12:00 AM
ADDED : ஜன 12, 2016 11:15 AM
அ நிறம் | அளவு
திண்டுக்கல்: ஆசிய நாடுகளுக்கு இடையேயான கராத்தே போட்டியில் திண்டுக்கல் பள்ளி மாணவர்கள் பதக்கங்கள் பெற்று சாதனை புரிந்துள்ளனர்.
திண்டுக்கல் அச்யுதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சிபிஹரன், ஹரிஸ்தர்ஷன். கடந்த டிச., 27, 28ல் ஆசிய அளவில் பல்வேறு நாடுகள் பங்கேற்ற கராத்தே போட்டி ஐதராபாத் நகரில் நடந்தது.
இதில் திண்டுக்கல் மாணவர்கள் இந்தியாவின் சார்பில், 10, 14 வயதிற்கு உட்பட கராத்தே போட்டிகளில் பங்கேற்றனர். அவர்களில் ஹரிஸ்தர்ஷன் வெள்ளிப் பதக்கமும், சிபிஹரன் வெண்கலப் பதக்கமும் பெற்றனர். இவர்களை கலெக்டர் ஹரிஹரன், பயிற்சியாளர் பிரசாத் சக்கரவர்த்தி, பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள், பெற்றோர் பாராட்டினர்.
