sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/3 ஆயிரம் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் நிம்மதி!

3 ஆயிரம் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் நிம்மதி!

3 ஆயிரம் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் நிம்மதி!


UPDATED : ஜன 12, 2016 12:00 AM

ADDED : ஜன 12, 2016 10:33 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 12, 2016 12:00 AM ADDED : ஜன 12, 2016 10:33 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

விருதுநகர்
: தமிழகத்தில் அரசு உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் பதவி உயர்வு பணி மூப்பு பட்டியல் தயாரிக்க
தினமலர் செய்தி எதிரொலியாக கல்வித்துறை சார்பில், நேற்று திருத்தப்பட்ட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 

இதனால் 3 ஆயிரம் பட்டதாரி   ஆசிரியர்களை பட்டியலில் சேர்க்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. மாநில அளவில் 1.1.2016 அடிப்படையில் அரசு உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் பதவி உயர்வுக்கான பணி மூப்பு பட்டியல் தயாரிக்க முதன்மை கல்வி அலுவலர்களுக்கு இயக்குனர் கண்ணப்பன் சில நாட்களுக்கு முன் உத்தரவிட்டார். இதில், 2002-2003 கல்வியாண்டில் நேரடி நியமனம் பெற்று 2002 ஜூலையில் பணியில் சேர்ந்த பட்டதாரி ஆசிரியர்கள், ஆசிரியர் பயிற்றுனர்கள் மூன்றாயிரம் பேரை பட்டியலில் சேர்க்க எவ்வித அறிவிப்பும் இல்லை. இதனால் பட்டியல் தயாரிப்பில் குழப்பம் ஏற்பட்டது.

இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக, பணிமூப்பு பட்டியல் தயாரிக்க திருத்தப்பட்ட உத்தரவை அனைத்து முதன்மை கல்வி அலுவலகங்களுக்கும் நேற்று கல்வித்துறை சார்பில் அனுப்பி வைக்கப்பட்டது.

அந்த உத்தரவில் 31.12.2002 வரை (2002 ஜூலை உட்பட) நேரடி நியமனம் பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள், இடை நிலையில் இருந்து பட்டதாரியாக பதவி உயர்வு பெற்றவர்கள், பிற துறை மற்றும் தொடக்க கல்வியில் இருந்து பள்ளிக் கல்விக்கு மாற்றமானவர் களையும் பட்டியலில் சேர்க்க வேண்டும். முந்தைய உத்தரவில் 2000-2001 என குறிப்பிட்டதை 2001-2002 என திருத்தம் செய்ய வேண்டும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர்கள் நிம்மதிதமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் சங்க மாவட்ட செயலாளர் முருகன், பதவி உயர்வு பெற்ற முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக தலைவர் திவ்யநாதன், துணைத் தலைவர் முகிலன் ஆகியோர் கூறுகையில், கல்வி இயக்குனர் கண்ணப்பன் மேற்கொண்ட இந்நடவடிக்கையால் 3 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் நிம்மதி அடைந்துள்ளனர். சங்கங்கள் சார்பில் நன்றியை தெரிவிக்கிறோம்என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us