தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அனைத்து மாநகராட்சி பள்ளிகளுக்கும் புரஜக்டர்

அனைத்து மாநகராட்சி பள்ளிகளுக்கும் புரஜக்டர்

அனைத்து மாநகராட்சி பள்ளிகளுக்கும் புரஜக்டர்


UPDATED : ஜன 12, 2016 12:00 AM

ADDED : ஜன 12, 2016 10:37 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 12, 2016 12:00 AM ADDED : ஜன 12, 2016 10:37 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை
அனைத்து மாநகராட்சி பள்ளிகளுக்கும் விரைவில், புரஜக்டர், ஒலி பெருக்கிகள் வழங்கப்படும்என, மேயர் சைதை துரைசாமி பேசினார்.

சென்னை மாநகராட்சியுடன், அமெரிக்கன் இந்தியா பவுண்டேஷன் அமைப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இதன் மூலம், மாநகராட்சி பள்ளிகளில், பல்வேறு புதிய தொழில்நுட்பங்களில் மாணவர்களுக்கு கல்வி அளிக்கப்படுகிறது. இந்த அமைப்பு சார்பில், எட்டு லட்சம் ரூபாய் மதிப்பில், 20 புரஜக்டர் கருவிகள், ஒலி பெருக்கிகள் நேற்று வழங்கப்பட்டன. அவற்றை, 20 சென்னை மாநகராட்சி பள்ளிகளின் தலைமையாசிரியர்களிடம், மேயர் சைதை துரைசாமி வழங்கினார். 

ரிப்பன் மாளிகையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் மேயர் பேசியதாவது:

மாணவர்கள் கற்றலில் ஆர்வமுடன் ஈடுபட, ஆசிரியர்கள் கற்பித்தலை சிறப்பாக செய்ய வேண்டும். புரஜக்டர், ஒலிபெருக்கிகள் இல்லாத பள்ளிகளை, மாநகராட்சி கல்வி அலுவலர் கணக்கெடுத்து அறிக்கை அனுப்ப வேண்டும். மாநகராட்சி மூலமாக இந்த கருவிகள், மற்ற பள்ளிகளுக்கும் விரைவில் வழங்கப்படும். நடுநிலை பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் கற்றல் சிறப்பாக அமைந்தால் தான், மேற்படிப்புக்கு ஊன்றுகோலாக அமையும். இவ்வாறு மேயர் பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us