UPDATED : ஜன 13, 2016 12:00 AM
ADDED : ஜன 13, 2016 11:32 AM
திருத்தணி
:
திருத்தணி ஒன்றியத்தில் உள்ள, 74 அரசு பள்ளிகளில், துப்புரவு பணிகளை மேற்கொள்ள, 3 மாதங்களுக்கு, 2.84 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
திருத்தணி ஒன்றியத்தில், 50 தொடக்கப் பள்ளிகள், 19 நடுநிலைப் பள்ளிகள், இரண்டு உயர்நிலைப் பள்ளிகள், மூன்று மேல்நிலைப் பள்ளிகள் என, மொத்தம், 74 பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளில், துப்புரவு பணிகள் செய்ய, ஊழியர்கள் இல்லாததால், சில இடங்களில் மாணவர்களே பணிகள் செய்து வந்தனர். இதையடுத்து, ஊரக வளர்ச்சி துறையின் சார்பில், 74 பள்ளிகளுக்கு, தொகுப்பூதியத்தில், தலா, ஒரு துப்புரவு ஊழியரை நியமித்து, 750 ரூபாய் முதல், 2,000 ரூபாய் வரை, மாத சம்பளம் வழங்க தீர்மானிக்கப்பட்டது. மேலும், பொருட்கள் வாங்க, 300 - 1,000 ரூபாய் வரை வழங்கவும் முடிவு செய்யப்பட்டது.
ஒன்றிய குழு
தலைவர் ரவி கூறியதாவது:
அரசு பள்ளிகளில் தொகுப்பூதியத்தில் வேலை செய்யும்
ஊழியர்களுக்கு, முதல் மூன்று மாதங்களுக்கான சம்பளமும்,
பொருட்கள் வாங்கவும், ஒன்றிய பொது நிதியில் இருந்து, 2.84 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த தொகை, அந்தந்த பள்ளி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. பள்ளி தலைமை
ஆசிரியர்கள், துப்புரவு பணியாளர்களுக்கு, மாத ஊதியம் வழங்கி, கண்காணிப்பாளர்கள். இவ்வாறு அவர்
கூறினார்.
