தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கற்றல் அடைவுத்திறன் தேர்வு; மாணவ, மாணவியர் பங்கேற்பு

கற்றல் அடைவுத்திறன் தேர்வு; மாணவ, மாணவியர் பங்கேற்பு

கற்றல் அடைவுத்திறன் தேர்வு; மாணவ, மாணவியர் பங்கேற்பு


UPDATED : ஜன 13, 2016 12:00 AM

ADDED : ஜன 13, 2016 11:47 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 13, 2016 12:00 AM ADDED : ஜன 13, 2016 11:47 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி அடுத்த, காவேரிப்பட்டணத்தில் நடந்த கற்றல் அடைவுத்திறன் தேர்வை, 710 மாணவ, மாணவியர்கள் எழுதினர். 

காவேரிப்பட்டணம் வட்டார வள மையத்திற்கு உட்பட்ட, துவக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில், 3, 5, 8ம் வகுப்பு தமிழ் வழி மற்றும் ஆங்கில வழியில் படிக்கும் மாணவ, மாணவியருக்கு, மாநில அளவிலான கற்றல் அடைவுத்திறன் தேர்வு நடந்தது. இதில், 710 மாணவ, மாணவியர் கலந்து கொண்டு தேர்வு எழுதினர். 

காவேரிப்பட்டணம் அடுத்த ஜின்னா சாலை பள்ளியை, முதன்மை கல்வி அலுவலர் தமிழரசு நேரில் சென்று ஆய்வு செய்தார். முன்னதாக வட்டார வளமைய மேற்பார்வையாளர் அம்பிகேஸ்வரி, உதவி தொடக்க கல்வி அலுவலர் கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில், ஆசிரியர் பயிற்றுனர்கள் மற்றும் சிறப்பு பயிற்றுநர்களுக்கு அடைவுத்திறன் தேர்வு குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us