தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சிறப்பு பிரிவு டாக்டர் தேர்வு; 100 பேர் ‘ஆப்சென்ட்’

சிறப்பு பிரிவு டாக்டர் தேர்வு; 100 பேர் ‘ஆப்சென்ட்’

சிறப்பு பிரிவு டாக்டர் தேர்வு; 100 பேர் ‘ஆப்சென்ட்’


UPDATED : ஜன 14, 2016 12:00 AM

ADDED : ஜன 14, 2016 12:25 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 14, 2016 12:00 AM ADDED : ஜன 14, 2016 12:25 PM


Follow on Google
அ நிறம் | அளவு

போட்டித் தேர்வு இன்றி வேலைக்கு தேர்வான, 547 சிறப்பு பிரிவு டாக்டர்களில், 100 பேர் சான்றிதழ் சரிபார்ப்புக்கு வரவில்லை.

போட்டித் தேர்வுகள் மூலம் தேர்வு செய்யப்பட்ட, 2,147 உதவி டாக்டர்கள், அரசு மருத்துவமனைகளில் பணியில் சேர்ந்துள்ளனர். மேலும், அறுவை சிகிச்சை சார்ந்த, 547 டாக்டர்கள் தேர்வு செய்யப்படுவர் என, அரசு அறிவித்தது. இத்தகைய டாக்டர்கள் அரசு பணியில் ஆர்வம் காட்டாததால், ’நேரில் வந்தால் போதும்; உடனடி வேலை’ என, மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியமான, எம்.ஆர்.பி., சிவப்புக் கம்பளம் விரித்தது.

இதற்கு விண்ணப்பித்தோரில், 547 பேரை தேர்வு செய்தது. சான்றிதழ் சரிபார்ப்பு பணி, ஜன., 5ல் துவங்கி, 12ம் தேதி முடிந்தது. இதில், 100 டாக்டர்கள் வரை வரவில்லை. அதிர்ச்சி அடைந்த, எம்.ஆர்.பி., வராத டாக்டர்களுக்கு, மீண்டும் ஒரு வாய்ப்பு தர முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us