தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/நாளை(15-03-2016) 10ம் வகுப்பு பொதுத்தேர்வு

நாளை(15-03-2016) 10ம் வகுப்பு பொதுத்தேர்வு

நாளை(15-03-2016) 10ம் வகுப்பு பொதுத்தேர்வு


UPDATED : மார் 14, 2016 12:00 AM

ADDED : மார் 14, 2016 04:29 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 14, 2016 12:00 AM ADDED : மார் 14, 2016 04:29 PM


Follow on Google
அ நிறம் | அளவு

முறைகேடுகளை தடுக்க, பறக்கும் படையினர் மற்றும் நிலையான படையினர், மாநிலம் முழுவதும் தேர்வு அறையில் ஆய்வு பணியில் ஈடுபட உள்ளனர். கடந்தாண்டு, ஆங்கிலம் வினாத்தாளில் பல பிழைகள் இருந்தன. இந்த ஆண்டு வினாத்தாள் பிழைகள் இல்லாமல் இருக்கும் என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

அதே போல், கடந்த ஆண்டு அறிவியல் பாடத்தில் ஏராளமானோர்சென்டம் எடுத்தனர். அதை கட்டுப்படுத்த, இந்த ஆண்டு அறிவியல் வினாத்தாள் கடினமாக இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. மார்ச், 4ல் பிளஸ் 2 பொதுத்தேர்வு துவங்கியது. மொழிப்பாட தேர்வுகள் முடிந்து, இன்று முதல், முக்கிய பாடங்களுக்கு தேர்வுகள் நடக்க உள்ளன. 

மேலும் இன்று முதல், விடைத்தாள் திருத்தும் பணியும் துவங்குகிறது. முதல் நாளான இன்று, விடைத்தாள் திருத்துவதற்கான ஆயத்தப் பணிகள் மேற்கொள்ளப்படும். மார்ச், 16 முதல், விடைத்தாள்கள் திருத்தும் பணி துவங்குகிறது. தேர்வுகள் முடிய முடிய, அந்தந்த பாடங்களுக்கு விடைத்தாள்கள் திருத்தப்பட உள்ளன.

10
ம் வகுப்பு தேர்வு விவரம்

மார்ச் -15 :  தமிழ் மொழித்தாள்- 1

மார்ச் -16 : தமிழ் மொழித்தாள்- 2

மார்ச்- 22 : ஆங்கிலம் முதல் தாள்

மார்ச் - 29 : ஆங்கிலம் 2ம் தாள்

ஏப்ரல் -4 : கணிதம்

ஏப்ரல் -7 : அறிவியல்

ஏப்ரல் -11 : சமூக அறிவியல்

ஏப்ரல்- 13 : விருப்ப பாடம் 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us