UPDATED : மார் 15, 2016 12:00 AM
ADDED : மார் 15, 2016 11:02 AM
சேலம்
: சேலம்
மாவட்டத்தில் நேற்று நடந்த வேதியியல் தேர்வில், ஐந்து மாணவர்கள் பிட் அடித்து எழுதும் போது, பிடிபட்டனர்.
சேலம் மாவட்டத்தில், 99 தேர்வு மையங்களில், 38 ஆயிரம் மாணவ, மாணவியர் பிளஸ் 2 தேர்வு எழுதுகின்றனர். இதில், முக்கிய தேர்வாக கருதப்படும் வேதியியல் தேர்வு நேற்று நடந்தது. இதில், பிட் வைத்து எழுதுவது, கேட்டு, பார்த்து எழுதுவது உள்ளிட்ட முறைகேடுகளை தடுக்க, 120 ஆசிரியர்கள் கொண்ட பறக்கும் படை அமைக்கப்பட்டிருந்தது.
மேலும் முதன்மைக்கல்வி அலுவலர் ஞானகவுரி, மாவட்டக்கல்வி அலுவலர் ராமலிங்கம் உள்ளிட்டோர், தலைமையிலான குழுக்களும் தீவிர கண்காணிப்பில் இருந்தன. இதில், மேச்சேரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மையத்தில் தேர்வெழுதிய, அப்பள்ளி மாணவன், மேட்டூர் எம்.ஏ.எம்., பள்ளியில் தேர்வெழுதிய ஒரு தனித்தேவர், பூலாம்பட்டி எஸ்.கே.டி., பள்ளியில் எழுதிய 3 தனித்தேர்வர் என ஐந்து பேர், பறக்கும் படையினரால், கையும் களவுமாக பிடிக்கப்பட்டனர்.
பிடிபட்ட மாணவர்களின் விடைத்தாள்கள் தனியே சேகரிக்கப்பட்டுள்ளது. இவர்கள் மீதான அறிக்கையும், இயக்குனரகம் மற்றும் தேர்வுத்துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
