UPDATED : மார் 15, 2016 12:00 AM
ADDED : மார் 15, 2016 11:16 AM
அ நிறம் | அளவு
கோவை
: பிளஸ் 2 மொழிபாடங்களுக்கான மதிப்பீட்டு பணிகள், கோவையில் முதன்மை கல்வி அலுவலர் அருள்முருகன் தலைமையில் நேற்று
துவங்கின.
கடந்த, 10ம் தேதியுடன் மொழிப்பாடங்களுக்கான தேர்வுகள் நிறைவு பெற்றது. கோவை மாவட்டத்தில், சுமார், 5.2 லட்சம் மொழிப்பாடங்களுக்கான விடைத்தாள்கள் திருத்தப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முதல் நாளான நேற்று, முதன்மை தேர்வாளர்கள், முதன்மை கூர்ந்தாய்வாளர்கள், 106 பேர் விடைத்தாள்களை திருத்தினர்.
தொடர்ந்து, 1,200 ஆசிரியர்கள் மொழிப்பாடங்களுக்கான மதிப்பீட்டு பணிகளில் ஈடுபடவுள்ளனர். இப்பணிகள் இம்மாதம் இறுதி வரை நடக்கலாம் எனவும், முக்கிய பாடங்களுக்கான மதிப்பீட்டு பணிகள், ஏப்ரல் முதல் வாரத்தில் துவங்கலாம் எனவும், அதிகாரிகள் தெரிவித்தனர்
