UPDATED : மார் 16, 2016 12:00 AM
ADDED : மார் 16, 2016 11:28 AM
ஈரோடு
:
அந்தியூரில், பிளஸ் 2 பொதுத்தேர்வில் பிட் வைத்திருந்த, தனியார் பள்ளி மாணவர்கள், நான்கு பேர் சிக்கினர்.
பிளஸ் 2 வேதியியல் தேர்வு நேற்று முன் தினம் நடந்தது. ஈரோடு மாவட்டத்தில், பள்ளி கல்வி துறை (பணியாளர் தொகுதி) இணை இயக்குனர் தலைமையிலான குழுவினர், சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அந்தியூரில் ஒரு தனியார் பள்ளியில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். தேர்வு எழுத பிட் வைத்து இருந்ததாக, மூன்று மாணவர்கள் பிடிபட்டனர். இதேபோல் மற்றொரு தனியார் பள்ளியில் ஒரு மாணவர் சிக்கினார்.
இதுகுறித்து பள்ளி கல்வி துறையினர் கூறியதாவது:
பிட் வைத்து சிக்கிய, நால்வரும் வேதியியல் தேர்வு எழுத, அனுமதி மறுக்கப்பட்டது. பள்ளி கல்வி துறை இயக்குனர் விசாரணை நடத்துவார். இதில் குற்றச்சாட்டு உண்மையாகும் பட்சத்தில் நான்கு பேரும், மூன்று ஆண்டுகள் தேர்வு எழுத முடியாது. பிற தேர்வுகளை வழக்கம் போல் அவர்கள் எழுதலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
