தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/வெயிலால் வதங்கும் குழந்தைகள்; கவனம் செலுத்துமா கல்வித்துறை?

வெயிலால் வதங்கும் குழந்தைகள்; கவனம் செலுத்துமா கல்வித்துறை?

வெயிலால் வதங்கும் குழந்தைகள்; கவனம் செலுத்துமா கல்வித்துறை?


UPDATED : மார் 16, 2016 12:00 AM

ADDED : மார் 16, 2016 11:37 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 16, 2016 12:00 AM ADDED : மார் 16, 2016 11:37 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பூர்
: வெயிலின் தாக்கத்தால் ஏற்படும் நோய்கள் குறித்து விழிப்புணர்வு 
ஏற்படுத்தி, பள்ளி குழந்தைகளை காக்க, கல்வித்துறை முன்வர வேண்டும்.

திருப்பூரில், கடந்த ஒரு மாதமாக, வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களாக, காலை, 7:00 மணிக்கே, வெயில் சுட்டெரிக்க துவங்கி விடுகிறது; மாலை, 6:00 மணி வரை, வெயிலின் தீவிரம் குறைவதே இல்லை. முற்பகல், நண்பகல் மற்றும் பிற்பகல் நேரங்களில், வெயிலின் உக்கிரம் அதிகரிப்பதால், ரோடுகளில் நடமாட முடியாமல் மக்கள் தவிக்கின்றனர்.

பகல் முழுவதும் வெயில் நீடிக்கிறது; இரவு நேரங்களில் வீடுகளில் புழுக்கத்தால், தூக்கமின்றி தவிக்கும் நிலை உள்ளது. வரும் ஜூன் மாதம் வரை வெயில் நீடிக்கும்; துவக்கத்திலேயே வெயில் வாட்டி வதைப்பதால், இன்னும் மூன்று மாதங்களை எப்படி சமாளிப்பது என, பலரும் புலம்பும் நிலை ஏற்பட்டுள்ளது. வெயிலின் தாக்கத்தால், பள்ளி குழந்தைகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்; மின்விசிறி அற்ற பல பள்ளிகளில், நெருக்கமான சூழலில் மர்ந்திருக்கும் குழந்தைகள், புழுக்கத்தில் தவிக்கின்றனர். பள்ளிக்கு வந்து செல்லும் நேரங்களில், சூரியக்கதிர்களின் நேரடி தாக்கத்தில், உடல் முழுக்க வியர்த்து கொட்டி, உடல் எரிச்சலுக்கு ஆளாகின்றனர். 

இதனால், உடலில் சூட்டு கொப்பளங்கள், கண்களில் வீக்கம், அம்மை நோய் தாக்கம் போன்ற பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது.புழுக்கத்தால் பள்ளி குழந்தைகள் சந்திக்கும் பாதிப்புகளை குறைக்க, கல்வித்துறை முன்வர வேண்டும். துவக்க பள்ளிகள் மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் மோர், தர்பூசணி பழத்துண்டுகள், வெள்ளரி பிஞ்சு, எலுமிச்சை சாறு, கம்மங்கூழ் போன்றவற்றை, வாரம் இருமுறை, குழந்தைகளுக்கு வழங்க வேண்டும்.

பள்ளியில் உள்ள பெற்றோர் ஆசிரியர் சங்கம் மற்றும் அப்பகுதி தன்னார்வ தொண்டு நிறுவனங்களை, ஸ்பான்சர் பெற்று, இத்திட்டத்தை கல்வித்துறை செயல்படுத்த முன்வர வேண்டும். மே மாதம் பள்ளி விடுமுறை என்பதால், இரண்டு மாதங்களுக்கு மட்டும், கோடை கால சிறப்பு திட்டமாக, இதை செயல்படுத்த கல்வித்துறை முயற்சிக்க வேண்டும்.

அதே போல், தனியார் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு, குளிர்ச்சி தரும் பழங்களை கொடுத்து அனுப்புமாற, பெற்றோர்களுக்கு, பள்ளி நிர்வாகங்கள் அறிவுறுத்த வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us