பாரதியார் பல்கலைக்கூடத்தில் தெருக்கூத்து பயிற்சி பட்டறை
பாரதியார் பல்கலைக்கூடத்தில் தெருக்கூத்து பயிற்சி பட்டறை
UPDATED : மார் 17, 2016 12:00 AM
ADDED : மார் 17, 2016 10:38 AM
புதுச்சேரி
: புதுச்சேரி
பாரதியார் பல்கலைக்கூடத்தில், மூன்று நாள் தெருக்கூத்து பயிற்சி
பட்டறை நேற்று துவங்கியது.
தஞ்சை தென்னக பண்பாட்டு மையம், புதுச்சேரி பாரதியார் பல்கலைக்கூடம் இணைந்து, அரியாங்குப்பத்தில் உள்ள பாரதியார் பல்கலைக்கூட வளாகத்தில் ஏற்பாடு செய்திருந்த பயிற்சி பட்டறை நேற்று துவங்கியது. பாரதியார் பல்கலைக்கூட உறுப்பினர் செயலர் ராஜரத்தினம் வரவேற்றார். தென்னக பண்பாட்டு மைய இயக்குனர் சாஜித் வாழ்த்தி பேசினார். தெருக்கூத்து கலைஞர் கோபி, தெருக்கூத்து அடிப்படை நுணுக்கங்கள் குறித்து விளக்கினார்.
நடனத்துறைத் தலைவி சாந்திபாபு, நுண்கலைத்துறைத் தலைவர் சிற்பி ஜெயராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தமிழகம் புதுச்சேரியை சேர்ந்த தெருக்கூத்து மற்றும் நடனம் மற்றும் நாடகத்துறை கலைஞர்கள், மாணவ மாணவியர் பங்கேற்றனர். பயிற்சி பட்டறை இன்றும், நாளையும் நடக்கிறது.
