UPDATED : மார் 17, 2016 12:00 AM
ADDED : மார் 17, 2016 10:39 AM
அ நிறம் | அளவு
ஊத்துக்கோட்டை
:
சிறிதளவு மனநிலை பாதிக்கப்பட்ட மாணவி, ஆசிரியர்
உதவியுடன், பத்தாம் வகுப்பு தேர்வு எழுதினார்.
ஊத்துக்கோட்டை அடுத்த, செஞ்சியகரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திரன். இவரது மனைவி புஷ்பா. இவர்களின் இரண்டாவது மகள் ஜெபவதி; சிறிதளவு மனநிலை பாதிக்கப்பட்டவர். இவர், ஊத்துக்கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்து வருகிறார்.
இந்தாண்டு, 10ம் வகுப்பு அரசு தேர்வில், இவர் கலந்து கொண்டார். இவரால் தேர்வு எழுத முடியாததால், ஆசிரியர் ஒருவர் உதவியுடன் எழுதினார். கேள்விகளுக்கு இவர் பதில் சொல்ல, ஆசிரியர் எழுதினார்.
