தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஹைடெக் காப்பி; மாணவர்கள் சிக்கினர்

ஹைடெக் காப்பி; மாணவர்கள் சிக்கினர்

ஹைடெக் காப்பி; மாணவர்கள் சிக்கினர்


UPDATED : மார் 18, 2016 12:00 AM

ADDED : மார் 18, 2016 11:08 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 18, 2016 12:00 AM ADDED : மார் 18, 2016 11:08 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஐதராபாத்
தெலுங்கானா மாநிலம், ஐதராபாத்தில், பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதிய அஜிஸ் என்ற மாணவன், காப்பி அடிப்பதற்கு, நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தியுள்ளான்.

மொபைல் போன், மைக்ரோ சிப், புளுடூத் ஆகியவற்றை உடலில் பொருத்தி, மறைத்தபடி, தேர்வு அறைக்கு சென்றுள்ளான். ஸ்விட்ச் ஆன் செய்த மொபைல் போனில், புளுடூத் வாயிலாக கேள்விகளை படிக்க; வெளியே இருந்த கல்லுாரி மாணவனான அவனது நண்பன் சமயதுல்லா, போனில் விடைகளை வாசித்துள்ளனர்.

அதை கேட்டு மாணவன் அஜிஸ், தேர்வு எழுதியுள்ளான். இதே முறையில் இரண்டு நாட்கள் தேர்வு எழுதிய நிலையில் மூன்றாவது நாள், கண்காணிப்பாளரிடம் அஜிஸ் சிக்கினான்.

அஜிசும், அவனுக்கு உதவிய சமயதுல்லாவும் கைதாகினர். அஜிஸ், மொபைல் போன் பழுதுநீக்கும் கடையில் சில நாட்கள் வேலை செய்து வந்ததாகவும், அப்போது இந்த தொழில்நுட்பத்தை கற்றதும் விசாரணையில் தெரிய வந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us