UPDATED : மார் 19, 2016 12:00 AM
ADDED : மார் 19, 2016 10:42 AM
புதுச்சேரி
: மணக்குள
விநாயகர் பொறியியல் கல்லுாரியில் டிரிம்ஸ் 16 என்ற தலைப்பில் உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி நடந்தது.
மணக்குள விநாயகர் கல்வி அறக்கட்டளை தலைவர் தனசேகரன் தலைமை தாங்கினார். துணை தலைவர் சுகுமாறன் முன்னிலை வகித்தார். கல்லுாரி முதல்வர் டாக்டர் வெங்கடாஜலபதி வரவேற்றார். கல்வியாளர் ரமேஷ்பிரபா பங்கேற்று முதுநிலை பட்ட படிப்பான எம்.பி.ஏ., மற்றும் எம்.சி.ஏ., படிப்பின் முக்கியத்துவம் குறித்தும் இந்திய ஆட்சி பணி, அரசு வேலைவாய்ப்பு தேர்வுகள் குறித்து பேசினார்.
கல்வி அறக்கட்டளை செயலாளர் டாக்டர் நாராயணசாமி வாழ்த்தி பேசினார்.நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. அதில் வெற்றி பெற்றவர்களுக்கு ரூ. 75 ஆயிரத்தை பகிர்ந்து வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை எம்.சி.ஏ., துறைத் தலைவர் டாக்டர் மார்டின், எம்.பி.ஏ., துறைத் தலைவர் மற்றும் பேராசிரியர்கள், மாணவர்கள் செய்திருந்தனர். வேலைவாய்ப்பு அதிகாரி கைலாசம் நன்றி கூறினார்.
