தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஜே.என்.யு., மாணவர்களுக்கு இடைக்கால ஜாமின்

ஜே.என்.யு., மாணவர்களுக்கு இடைக்கால ஜாமின்

ஜே.என்.யு., மாணவர்களுக்கு இடைக்கால ஜாமின்


UPDATED : மார் 19, 2016 12:00 AM

ADDED : மார் 19, 2016 10:44 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 19, 2016 12:00 AM ADDED : மார் 19, 2016 10:44 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுடில்லி
: தேச துரோக குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட
, ஜே.என்.யு., பல்கலை மாணவர்கள் உமர் காலித் மற்றும் அனிர்பானுக்கு, டில்லி கோர்ட், ஆறு மாத கால இடைக்கால ஜாமின் வழங்கியது.

டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில், பார்லி., தாக்குதல் வழக்கு குற்றவாளி, அப்சல் குருவின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதில், இந்தியாவுக்கு எதிராகவும், பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும் கோஷங்கள் எழுப்பப்பட்டதாக புகார் எழுந்தது.

இது தொடர்பாக, மாணவர் சங்க தலைவர் கன்னையா குமார், நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த, மாணவர்கள், உமர் காலித், அனிர்பான் பட்டாச்சார்யா ஆகியோர், கடந்த மாதம் கைது செய்யப்பட்டனர். இதில், கன்னையாகுமார், ஆறு மாத ஜாமினில் விடுவிக்கப்பட்டார். 

இந்நிலையில், உமர் காலித்தும், அனிர்பானும், ஜாமின் கோரி டில்லி கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இதை விசாரித்த நீதிபதி ரீதிஷ் சிங், இருவருக்கும், நிபந்தனைகளுடன், ஆறு மாத கால ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us