தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பேனர் ’திருடிய’ அமெரிக்க மாணவன்; 15 ஆண்டுகள் சிறை

பேனர் ’திருடிய’ அமெரிக்க மாணவன்; 15 ஆண்டுகள் சிறை

பேனர் ’திருடிய’ அமெரிக்க மாணவன்; 15 ஆண்டுகள் சிறை


UPDATED : மார் 19, 2016 12:00 AM

ADDED : மார் 19, 2016 10:54 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 19, 2016 12:00 AM ADDED : மார் 19, 2016 10:54 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சியோல்
: சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட
, அமெரிக்க மாணவனுக்கு எதிரான, &'வீடியோ&' ஆதாரத்தை, வட கொரியா வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவில், வெர்ஜினியா பல்கலைக்கழக மாணவர், ஒட்டோ வார்ம்பியர், 21. ஜனவரியில், புத்தாண்டை கொண்டாட, நண்பர்களுடன் வட கொரியாவுக்கு சுற்றுலா சென்றார். அங்கு, தங்கியிருந்த ஓட்டலில் அரசியல் வாசகம் பொறிக்கப்பட்ட, பேனர் ஒன்று இருந்தது. அதை திருட முயன்றதாக, தேச துரோக குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டார்.

வழக்கை விசாரித்த, வட கொரியா சுப்ரீம் கோர்ட், அந்த மாணவருக்கு, 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த, அமெரிக்கா, மாணவர் வார்ம்பியரை விடுதலை செய்யக் கோரியது; ஆனால், வட கொரியா மறுத்து விட்டது.

அணு ஆயுதச் சோதனையால் அமெரிக்க - வட கொரியா உறவு ஏற்கனவே மோசமடைந்துள்ள நிலையில், இந்த விவகாரம் மேலும் பதற்றத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், மாணவன் தொடர்பாக, கண்காணிப்பு கேமராவில் பதிவான வீடியோ காட்சியை, வட கொரியா வெளியிட்டுள்ளது.

அதில், அதிபர் கிம் ஜாங்கின் தேச பக்தியுடன், நம்மை நாம் வலிமையாக்குவோம் என்ற வாசகம் பொறிக்கப்பட்ட பேனரை, மாணவன் வார்ம்பியர், சுவரில் இருந்து எடுத்து கீழே சுருட்டி போடும் காட்சி இடம் பெற்றுள்ளது. எனினும், அந்த பேனரை திருடிச் செல்வது போன்ற தெளிவான காட்சி இல்லை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us