UPDATED : மார் 22, 2016 12:00 AM
ADDED : மார் 22, 2016 10:39 AM
அ நிறம் | அளவு
வாலாஜாபாத்
:
தனியார் பொறியியல் கல்லுாரி மாணவர்களின் பருவத்தேர்வு (செமஸ்டர்) முடிவுகளை,
கல்லுாரி நிர்வாகம் வெளியிடாததால், மாணவர்கள் நேற்று, சாலை மறியலில் ஈடுபட்டனர்.
வாலாஜாபாத்
அடுத்த, புளியம்பாக்கம் கிராமத்தில், தனியார் பொறியியல் கல்லுாரி உள்ளது. இக்கல்லுாரியில் படிக்கும்,
மூன்றாம் ஆண்டு பொறியியல் கல்லுாரி மாணவர்களின்
பருவத்தேர்வு (செமஸ்டர்) முடிவுகளை, கல்லுாரி
நிர்வாகம் வெளியிடவில்லை என, கூறப்படுகிறது.
அதை கண்டித்து, கல்லுாரி மாணவர்கள், நேற்று செங்கல்பட்டு காஞ்சிபுரம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த போலீசார், மாணவர்களிடம் உரிய கல்லுாரி நிர்வாகத்திடம் முறையிட்டு, தீர்வு பெற்று கொள்ளுங்கள் என, அறிவுறுத்தியதின் பேரில், மாணவர்கள், சாலை மறியலை கைவிட்டனர்.
