UPDATED : மார் 24, 2016 12:00 AM
ADDED : மார் 24, 2016 11:09 AM
திருப்பூர்
: பிளஸ் 2 புள்ளியியல் பாட தேர்வை, மாவட்ட அளவில், ஆயிரத்து, 83 மாணவர்கள் எழுதினர்; 24 பேர்
தேர்வுக்கு வரவில்லை.
பிளஸ் 2 பொது தேர்வுகள், இம்மாதம் 4ல் துவங்கின. நேற்று, அரசியல் அறிவியல், நர்ஸிங், புள்ளியியல் மற்றும் தொழிற்கல்வி தேர்வு நடைபெற்றது. மாவட்ட அளவில், அரசியல் அறிவியல் தேர்வை, 126 மாணவர்கள் எழுதினர். மூன்று பேர் பங்கேற்கவில்லை. தனித்தேர்வர்கள், 18 பேர் எழுதினர். நர்ஸிங் பாடத்தை, 54 மாணவர்கள் எழுதினர்; ஒருவர் வரவில்லை. புள்ளியியல் தேர்வை, ஆயிரத்து, 83 மாணவர்கள் எழுதினர்; இதில், 24 பேர் தேர்வுக்கு வரவில்லை.
அதேபோல்,
வேளாண் தேர்வை, 68 மாணவர்கள் எழுதி னர்; மூவர்
பங்கேற்வில்லை. கணக்கு பதிவியியல் மற்றும் தணிக்கையியல் தேர்வை, 733 பேர் எழுதினர்; 18 பேர் வரவில்லை. பொது இயந்திரவியல்,
83 பேரும், அலுவலக மேலாண்மை தேர்வை, 102 பேரும்,
டெக்ஸ்டைல்ஸ் தேர்வை, 50 பேரும் எழுதினர்.
ஆடை வடிவமைப்பு தேர்வை, 54 பேர் எழுதியதில், ஒருவர் ஆப்சென்ட்; குழந்தை வளர்ப்பு தேர்வை, 37, மோட்டார் ரிவைண்டிங் தேர்வை, 15 பேர் எழுதினர்.
