தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஐதராபாத் பல்கலையில் பேராசிரியர்கள் போராட்டம்

ஐதராபாத் பல்கலையில் பேராசிரியர்கள் போராட்டம்

ஐதராபாத் பல்கலையில் பேராசிரியர்கள் போராட்டம்


UPDATED : மார் 30, 2016 12:00 AM

ADDED : மார் 30, 2016 10:07 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 30, 2016 12:00 AM ADDED : மார் 30, 2016 10:07 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஐதராபாத்
: தெலுங்கானா மாநிலத்தில் உள்ள, ஐதராபாத் மத்தியப் பல்கலையில், மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களின் போராட்டம் தொடர்கிறது. 50க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் விடுப்பு எடுக்கும் போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர்.

ஆராய்ச்சி மாணவர் ரோஹித் வெமுலா தற்கொலையைத் தொடர்ந்து, ஐதராபாத் பல்கலையில் கடந்த இரண்டு மாதங்களாக, மாணவர்கள் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கிடையே, விடுமுறையில் இருந்து திரும்பிய, துணைவேந்தர் அப்பாராவ் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவருடைய அலுவலகம் மற்றும் வீட்டை மாணவர்கள் சூறையாடினர். இது தொடர்பாக, 25 மாணவர்கள், இரண்டு பேராசிரியர்கள் கைது செய்யப்பட்டனர். இதைக் கண்டித்து, பல்கலை வளாகத்தில், மாணவர்களும், பேராசிரியர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

அவர்கள் மீது போலீசார், தடியடி நடத்தினர். இதற்கு பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில், துணைவேந்தரை பதவி விலகக் கோரியும், போலீஸ் அத்துமீறலை எதிர்த்தும், நேற்று, 50க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் ஒட்டு மொத்த விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us