பாரதிதாசன் மகளிர் கல்லூரியில் சட்ட சேவை மையம் திறப்பு
பாரதிதாசன் மகளிர் கல்லூரியில் சட்ட சேவை மையம் திறப்பு
UPDATED : மார் 31, 2016 12:00 AM
ADDED : மார் 31, 2016 11:07 AM
புதுச்சேரி
: பாரதிதாசன்
மகளிர் கல்லுாரியில் சட்ட சேவை மையம் திறப்பு விழா நடந்தது.
புதுச்சேரியில் தேசிய சட்டப்பணிகள் ஆணைய உத்தரவுப்படி, பாரதிதாசன் மகளிர் கல்லுாரி, ஜிப்மர் அகடமி சென்டர், புதுச்சேரி பல்கலைக்கழகம் ஆகிய 3 இடங்களில் சட்ட சேவை மையங்கள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. பாரதிதாசன் மகளிர் கல்லுாரியில் அமைக்கப்பட்டுள்ள சட்ட சேவை மைய திறப்பு விழா நடந்தது.
தொழிலாளர் நீதிமன்ற நீதிபதி சிவக்குமார், முதன்மை சார்பு நீதிபதி மலர்விழி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று, சட்ட சேவை மைய பெயர் பலகையை திறந்து வைத்தனர். கல்லுாரி முதல்வர் சசிகாந்ததாஸ் முன்னிலை வகித்தார். கல்லுாரி உதவி பேராசிரியர் அலமேலு உட்பட பலர் பங்கேற்றனர்.
சட்ட சேவை மையத்தில் மூத்த பேராசிரியர் தலைவராகவும், சட்டப்பணிகள் ஆணையத்தால் நியமிக்கப்படும் வழக்கறிஞர் உறுப்பினராகவும், கல்லுாரி பயிலும் மாணவர் உறுப்பினராக செயல்படுவர். கல்லுாரியில் பயிலும் மாணவ மாணவிகள் சட்டம் மற்றும் சட்டம் சாராத பிரச்சனைகளுக்கு அணுகி பயன்பெறலாம்.
