UPDATED : மார் 31, 2016 12:00 AM
ADDED : மார் 31, 2016 11:10 AM
திண்டுக்கல்
:
தமிழகத்திலுள்ள பள்ளி மாணவ மாணவிகள் மூலம் வாக்காளர்களிடம் விழிப்புணர்வை
ஏற்படுத்தும் உறுதிமொழி படிவங்களில் பெற்றோர்களிடம் கையெழுத்து வாங்க வேண்டும் என
தேர்தல் ஆணையம் பள்ளிக் கல்வித்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.
தேர்தல் ஆணையம்
நூறு சதவீத ஓட்டுப்பதிவை சாத்தியமாக்க பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கையில்
ஈடுபட்டு வருகிறது. தற்போது பள்ளி மாணவ மாணவிகள் மூலம் பெற்றோர்களிடம் உறுதி மொழி
படிவம் வழங்கி, அதில் கைöழுத்திட வலியுறுத்தப்பட்டுள்ளனர். இதற்கான உறுதிமொழி படிவங்களை
தேர்தல் நடத்தும் அலுவலர்கள் அச்சிட்டு முதன்மை கல்வி அலுவலர்களுக்கு வழங்க
வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
நேர்முக உதவியாளர் அருண்சத்யா கூறியதாவது: தேர்தல் கமிஷன் அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கும் பள்ளிகள் மூலம் ஓட்டுப்பதிவு உறுதிசெய்யும் விழிப்புணர்வில் ஈடுபட உத்தரவிட்டுள்ளது. மாணவர்களுக்கு வழங்கப்படும் உறுதிமொழி படிவத்தில் தங்களது பெற்றோர்களின் உறுதிமொழி கையெழுத்து வாங்கிவர வேண்டும். அதனை பள்ளியில் வழங்கலாம்.
அதனை சேகரிக்கும் பள்ளி நிர்வாகத்தினர் மூலம் எங்களுக்கு வரும். நாங்கள் அதை மாநில தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைப்போம். இதன்மூலம் வாக்களிப்பதின் அவசியம் குறித்த விழிப்புணர்வு ஏற்படும், என்றார்.
