தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தேசிய திறனறிவு தேர்வில் அரசு பள்ளி மாணவியர் சாதனை

தேசிய திறனறிவு தேர்வில் அரசு பள்ளி மாணவியர் சாதனை

தேசிய திறனறிவு தேர்வில் அரசு பள்ளி மாணவியர் சாதனை


UPDATED : ஏப் 01, 2016 12:00 AM

ADDED : ஏப் 01, 2016 11:26 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 01, 2016 12:00 AM ADDED : ஏப் 01, 2016 11:26 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நாமக்கல்
: தேசிய அளவிலான திறனறிவுதேர்வில்
, நாமக்கல் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவியர், சாதனை படைத்தனர். 

மும்பையை சேர்ந்த தனியார் நிறுவனம் சார்பில், மாணவர்களின் திறமையை பயன்படுத்தும் நோக்கில், ஆண்டு தோறும், தேசிய அளவிலான திறனறிவு தேர்வு (இந்தியன் டேலண்ட்) நடக்கிறது. இரண்டு கட்டமாக நடந்த தேர்வில், நாமக்கல் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த, ஆறு முதல், எஸ்.எஸ்.எல்.சி., படிக்கும், 56 மாணவியர் பங்கேற்றனர். 

முதல் கட்டத்தேர்வில், 30 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இரண்டாம் கட்ட தேர்வில், இப்பள்ளியை சேர்ந்த மாணவியர் சவுந்தர்யா லட்சுமி, சந்தியா, ஜனப்பிரியா ஆகிய, மூன்று பேர் கிளாஸ் டாப்பர்ஸ்சாக தேர்வு செய்யப்பட்டனர். மாணவி மேதா வித்யா, கேர்ள் சைல்டு அவார்டு க்கு தேர்வு செய்யப்பட்டு விருதும், சான்றிதழும் வழங்கப்பட்டது. வெற்றி பெற்ற மாணவியரை, தலைமையாசிரியர் வெங்கடேஸ்வரன் உள்பட ஆசிரியர்கள் பாராட்டினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us