தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/நேரத்தை முதலீடு செய்தால் சி.ஏ., படிப்பு எளிது!

நேரத்தை முதலீடு செய்தால் சி.ஏ., படிப்பு எளிது!

நேரத்தை முதலீடு செய்தால் சி.ஏ., படிப்பு எளிது!


UPDATED : ஏப் 04, 2016 12:00 AM

ADDED : ஏப் 04, 2016 08:21 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 04, 2016 12:00 AM ADDED : ஏப் 04, 2016 08:21 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை
: பணம் செலவில்லாமல் நேரத்தை மட்டும் முதலீடு செய்து படித்தால் சி.ஏ., படிப்பு மிக எளிது, என ஆடிட்டர் சரவணபிரசாத் தெரிவித்தார்.

மதுரையில் தினமலர் சார்பில் நடந்த வழிகாட்டி நிகழ்ச்சியில் சி.ஏ., ஏ.சி.எஸ்., ஐ.சி.டபுள்யூ.ஏ.,படிப்புகள் குறித்து அவர் பேசியதாவது:

  கஷ்டப்பட்டு படிப்பதை விட, இஷ்டப்பட்டு படித்தால் எளிதில் இப்படிப்பை முடிக்கலாம். சி.ஏ., படிப்பு கடினமானது அல்ல. ஒரு நாளைக்கு 5 மணி முதல் 7 மணிநேரம் கவனம் சிதறாமல் படித்தால் எளிதில் வெற்றி பெறலாம். இது நான்கு ஆண்டுகள் படிப்பு. இதுபோன்றே ஐ.சி.டபுள்யூ.ஏ., ஏ.சி.எஸ்., படிப்புகள். முதலில் பவுண்டேஷன் கோர்ஸ் தேர்வு எழுத வேண்டும்.

இதில் அப்ஜெக்டிவ் வகை வினா கேட்கப்படும். அடுத்து இன்டர்மீடியேட் தேர்வு. இதன் பின் ஆடிட்டரிடம் மூன்று ஆண்டுகள் பயிற்சி பெற்று இறுதி தேர்வு எழுத வேண்டும். இதற்கு ஓராண்டிற்கு அதிகபட்சம் ரூ.2 லட்சம் செலவாகும். ஆடிட்டரிடம் பயிற்சி பெறும்போது மாதம் ரூ.3 ஆயிரம் முதல் ரூ.5 ஆயிரம் வரை ஊக்கத் தொகை மாணவர்களுக்கு வழங்கப்படும். 

இத்துறையில் வேலையின்மை என்பதே இருக்காது. சி.ஏ., முடித்தால் ரூ.50 ஆயிரம் முதல் ரூ.75 ஆயிரம் வரை சம்பளம் நிச்சயம். அனைத்து துறைகளிலும் நிதிசார்ந்த தொடர்பு இருப்பதால் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் ஆடிட்டர்களுக்கு சிறப்பான எதிர்காலம் உள்ளது.

சுயபொறுப்பு உள்ள மாணவர்கள் இப்படிப்பை தேர்வு செய்யலாம். செலவில்லாமல் நாள் ஒன்றுக்கு 7 மணிநேரம் நேரத்தை மட்டும் முதலீடு (செலவிடல்) செய்தால் வெற்றி உறுதி. இப்படிப்பை தேர்வு செய்யும் மாணவர்கள் ஆங்கில புலமை, அடிப்படை கணினி அறிவு போன்ற கூடுதல் தகுதிகளை வளர்த்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us