தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மாவட்ட ஹாக்கி அணி வரும் 10ம் தேதி தேர்வு

மாவட்ட ஹாக்கி அணி வரும் 10ம் தேதி தேர்வு

மாவட்ட ஹாக்கி அணி வரும் 10ம் தேதி தேர்வு


UPDATED : ஏப் 06, 2016 12:00 AM

ADDED : ஏப் 06, 2016 11:16 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 06, 2016 12:00 AM ADDED : ஏப் 06, 2016 11:16 AM


Follow on Google
அ நிறம் | அளவு

உடுமலை
: சப்-ஜூனியர் ஆண்கள் மற்றும் ஜூனியர் பெண்கள் பிரிவில் மாவட்டங்களுக்கு இடையேயான ஹாக்கி போட்டி துாத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மற்றும் திண்டுக்கல் மாவட்டத்திலும் விரைவில் நடக்க உள்ளது. 

இப்போட்டியில் பங்கேற்க திருப்பூர் மாவட்ட ஹாக்கி சங்கத்தின் சார்பில், மாவட்ட ஹாக்கி அணி தேர்வு உடுமலை நேதாஜி மைதானத்தில் வரும் 10ம் தேதி நடக்கிறது. காலை, 9:00 மணி முதல் நடக்கும் இத்தேர்வில் பங்கேற்க விதிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன.

சப்ஜூனியர் ஆண்களுக்கான வயது வரம்பு, 1-1-2000 ம் ஆண்டுக்கு பின் பிறந்தவராக இருக்க வேண்டும். ஜூனியர் பெண்களுக்கான பிரிவில் வயது வரம்பு, 1-1, 1997 ம்ஆண்டுக்கு பின் பிறந்தவராக இருக்க வேண்டும். 

இத்தகவலை, திருப்பூர் மாவட்ட ஹாக்கி சங்க செயலாளர் மோகன்குமார் தெரிவித்தார். போட்டித் தேர்வு குறித்த கூடுதல் தகவல்கள் பெற, 99656 31046 என்ற மொபைல் எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us