சென்டம் குறைவதால் இன்ஜி.,க்கு தொழிற்கல்வி மாணவர்கள் முந்த வாய்ப்பு!
சென்டம் குறைவதால் இன்ஜி.,க்கு தொழிற்கல்வி மாணவர்கள் முந்த வாய்ப்பு!
UPDATED : ஏப் 08, 2016 12:00 AM
ADDED : ஏப் 08, 2016 12:07 PM
பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிந்து, நேற்று முதல் விடைத்தாள் திருத்தம் துவங்கி உள்ளது. கணிதம், வேதியியல் மற்றும் இயற்பியலுக்கு, சில கேள்விகளுக்கு, போனஸ் மதிப்பெண்கள் வழங்கப்பட்டு உள்ளன. ஆனாலும், இந்த முறை மாணவர்கள் அதிக மதிப்பெண் பெறுவது கடினம் என்றே கூறப்படுகிறது.
கணிதம்
மற்றும் அறிவியல் இணைந்த பாடப்பிரிவு மாணவர்களுக்கு, கணிதம், வேதியியல்
மற்றும் உயிரி விலங்கியல் தேர்வுகள், மிக
கடினமாக இருந்தன. வேதியியல் கடினமாக இருந்தாலும், தேர்ச்சி குறையாது என, தெரிகிறது.
இந்த
மூன்று பாடங்களிலும், சென்டம் பெறுவோர் எண்ணிக்கை, குறைவாகவே இருக்கும்.
தொழிற்கல்வி
மாணவர்களுக்கான வினாத்தாள், இந்த அளவுக்கு
கடினமாக இல்லை.அதனால், இந்தாண்டு
தொழிற்கல்வியில், இன்ஜி.,சார்ந்த படிப்புகளான, பொது இயந்திரம், எலக்ட்ரானிக்ஸ் கருவிகள், ஆட்டோ மெக்கானிக், எலக்ட்ரிக்கல் மெஷின்ஸ் அண்டு அப்ளையன்சஸ்,
சிவில் வரைவாளர், டெக்ஸ்டைல் தொழில்நுட்பம் போன்றவற்றை படிக்கும்,
பிளஸ் 2 மாணவர்கள், கணித மாணவர்களை விட, அதிக மதிப்பெண் பெறும் வாய்ப்புள்ளது.
இன்ஜி.,
கட் - ஆப் மதிப்பெண்ணில், கணித பிரிவு மாணவர்களுடன், அவர்களுக்கு சமமாக தொழிற்கல்வி மாணவர்களும்,
அதிக மதிப்பெண்ணுடன் போட்டி போடும் நிலை
உள்ளது. எனவே, பி.இ., - பி.டெக்., படிப்புகளுக்கு,
கடந்த ஆண்டை விட, இந்த முறை, தங்களுக்கு பிடித்தமான பாடப்பிரிவுகளை எடுப்பதில்,
மாணவர்களுக்கு நிறைய சவால்கள்காத்
திருக்கின்றன.
சிக்கலாகும்
மருத்துவ சீட்
கணிதம் மற்றும் அறிவியல் இணைந்த பாடப்பிரிவு மாணவர்களை விட, அறிவியல் மட்டுமே படித்துள்ள, பிளஸ் 2 மாணவர்கள், இந்தாண்டு அதிக மதிப்பெண் பெற வாய்ப்பு உள்ளது. அறிவியல் மாணவர்களுக்கு, வேதியியல் தேர்வு மட்டுமே கடினமாக இருந்தது. இயற்பியல், விலங்கியல் மற்றும் உயிரியல் பாடங்கள், எளிமையாகவே இருந்தன. எனவே, இந்த முறை கணித பிரிவு மாணவர்களை விட, அறிவியல் மட்டும் படித்த மாணவர்கள், அதிக மதிப்பெண் எடுக்க வாய்ப்புள்ளது.
மருத்துவ, கட்ஆப மதிப்பெண்ணிலும், அறிவியல் மாணவர்கள் முன்னணி பெற்று, மருத்துவ, சீட் பெறுவர் என, தெரிய வந்துள்ளது. கால்நடை மருத்துவப் படிப்பிலும், இந்த போட்டி இருக்கும். மேலும், வேளாண்மை பட்டப் படிப்பில், அறிவியல் மாணவர்களுக்கு ஈடாக, வேளாண் செயல் முறைகள் பிரிவு மாணவர்கள், அதிக மதிப்பெண் பெற வாய்ப்புள்ளது.
ஐ.ஐ.டி.,
கல்வி கட்டணம் இரண்டு மடங்கு
எஸ்.சி., -
எஸ்.டி.,
மாணவர்களுக்கு முழு விலக்கு
புதுடில்லி:
நாட்டின் உயர் கல்வி நிறுவனமான, ஐ.ஐ.டி., எனப்படும்,
இந்திய தொழில்நுட்ப மையங்களில், இளங்கலை பட்டப் படிப்புக்கான கல்விக் கட்டணம்,
இரண்டு மடங்குக்கு மேல்
உயர்த்தப்பட்டுள்ளது. இருப்பினும், மாற்றுத்
திறனாளிகள், எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினர்,
பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு,
கல்விக் கட்டணத்தில் இருந்து முழு விலக்கு
அளிக்கும் முடிவுக்கு பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்தியாவில்,
பொறியியல் கல்விக்கு, புகழ்பெற்ற உயர்கல்வி நிறுவனமான, ஐ.ஐ.டி., சென்னை,
டில்லி, கவுகாத்தி, கான்பூர், கரக்பூர்,
மும்பை, ரூர்கி, புவனேஸ்வர்,
காந்திநகர், ஐதராபாத், இந்துார்,
ஜோத்பூர், மண்டி, பாட்னா,
ரோபர், வாரணாசி என, 16 இடங்களில் அமைந்துள்ளன.
குழு
ஆய்வு:இந்த கல்வி நிறுவனங்களுக்கு, பொது நுழைவுத்
தேர்வு நடத்தப்பட்டு, மாணவர்கள்
சேர்க்கப்படுகின்றனர். இக்கல்வி நிறுவனத்தில் இளங்கலை பட்டப் படிப்புக்கான கல்விக்
கட்டணத்தை உயர்த்துவது குறித்து,
ரூர்கி
- ஐ.ஐ.டி., தலைவர் அசோக்
மிஸ்ரா தலைமையில் ஒரு குழு அமைக்கப் பட்டிருந்தது. இந்தக் குழு, கடந்த மாதம் நடந்த கூட்டத்தில், தற்போது, 90 ஆயிரம் ரூபாயாக உள்ள ஆண்டு கல்விக் கட்டணத்தை,
மூன்று லட்சம் ரூபாயாக உயர்த்த பரிந்துரை
செய்தது.
மத்திய
மனித வளமேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தலைமையில், அனைத்து, ஐ.ஐ.டி.,க்களின் தலைவர்கள் அடங்கிய கவுன்சில் கூட்டம்,
நேற்று நடந்தது. இந்தக் கூட்டத்தில்,
இளங்கலை பட்டப் படிப்புக்கான, ஆண்டு கல்விக் கட்டணத்தை, 90 ஆயிரம் ரூபாயில் இருந்து, இரண்டு லட்சம் ரூபாயாக உயர்த்த முடிவு
செய்யப்பட்டு உள்ளது.
கட்டண விலக்கு:அதே நேரத்தில், எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினர், மாற்றுத் திறனாளிகள், பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு, முழு கட்டண விலக்கு அளிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த கட்டண விலக்கு முடிவை, பல்வேறு தரப்பின ரும் வரவேற்றுள்ளனர். தகுதி யிருந்தும், பொருளாதார காரணங்களால், ஐ.ஐ.டி.,யில் சேர முடியாமல் தவித்த மாணவர்களுக்கு இந்த முடிவு வரப்பிரசாதம் என, கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
முக்கிய முடிவுகள்:
வரும் கல்வி ஆண்டு முதல், இளங்கலை பட்டப் படிப்புக்கான, ஆண்டு கல்விக் கட்டணம், 90 ஆயிரம் ரூபாயில் இருந்து, இரண்டு லட்சம்ரூபாயாக உயர்த்தப்படுகிறது. ஏற்கனவே,
படிக்கும் மாணவர்களுக்கு, முந்தைய கல்விக் கட்டணமே தொடரும்எஸ்.சி., -
எஸ்.டி., பிரிவினர், மாற்றுத் திறனாளிகள், ஒரு லட்சத்துக்கும் குறைவான ஆண்டு வருமானம்
உள்ளோர், முழு கட்டண விலக்கை
கோரலாம்.
ஆண்டு
வருமானம், ஐந்து லட்சம்
ரூபாய்க்கும் கீழ் உள்ளோர், கல்விக்
கட்டணத்தில், மூன்றில் இரண்டு
பங்கு விலக்கு கோரலாம்இந்தப் பிரிவுகளின் கீழ் வராதவர்கள், கல்விக் கடன் பெற உதவி செய்யப்படும்.
மிகச் சிறந்த முடிவு: எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினர், பொருளாதார ரீதியில் பின்தங்கியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டண விலக்கு அளித்துள்ளது மிகவும் விவேகமான சிந்தனை. படிக்க இடம் கிடைத்தும், பணம் செலுத்த முடியாமல் திணறிய குடும்பங்களின் கவலையை உணர்ந்து, இந்த அரசு சரியான முடிவை எடுத்துள்ளது.- ஆனந்த் குமார் கணிதவியலாளர், சூப்பர் - 30 நிறுவனர்
