தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஐ.ஐ.டி., கல்வி கட்டணம் இரண்டு மடங்கு உயர்வு!

ஐ.ஐ.டி., கல்வி கட்டணம் இரண்டு மடங்கு உயர்வு!

ஐ.ஐ.டி., கல்வி கட்டணம் இரண்டு மடங்கு உயர்வு!


UPDATED : ஏப் 08, 2016 12:00 AM

ADDED : ஏப் 08, 2016 12:05 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 08, 2016 12:00 AM ADDED : ஏப் 08, 2016 12:05 PM


Follow on Google
அ நிறம் | அளவு

இருப்பினும், மாற்றுத் திறனாளிகள், எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினர், பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு, கல்விக் கட்டணத்தில் இருந்து முழு விலக்கு அளிக்கும் முடிவுக்கு பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்தியாவில், பொறியியல் கல்விக்கு, புகழ்பெற்ற உயர்கல்வி நிறுவனமான, ஐ.ஐ.டி., சென்னை, டில்லி, கவுகாத்தி, கான்பூர், கரக்பூர், மும்பை, ரூர்கி, புவனேஸ்வர், காந்திநகர், ஐதராபாத், இந்துார், ஜோத்பூர், மண்டி, பாட்னா, ரோபர், வாரணாசி என, 16 இடங்களில் அமைந்துள்ளன.

குழு ஆய்வு:

இந்த கல்வி நிறுவனங்களுக்கு, பொது நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு, மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். இக்கல்வி நிறுவனத்தில் இளங்கலை பட்டப் படிப்புக்கான கல்விக் கட்டணத்தை உயர்த்துவது குறித்து, ரூர்கி - ஐ.ஐ.டி., தலைவர் அசோக் மிஸ்ரா தலைமையில் ஒரு குழு அமைக்கப் பட்டிருந்தது. இந்தக் குழு, கடந்த மாதம் நடந்த கூட்டத்தில், தற்போது, 90 ஆயிரம் ரூபாயாக உள்ள ஆண்டு கல்விக் கட்டணத்தை, மூன்று லட்சம் ரூபாயாக உயர்த்த பரிந்துரை செய்தது.

மத்திய மனித வளமேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தலைமையில், அனைத்து, ஐ.ஐ.டி.,க்களின் தலைவர்கள் அடங்கிய கவுன்சில் கூட்டம், நேற்று நடந்தது. இந்தக் கூட்டத்தில், இளங்கலை பட்டப் படிப்புக்கான, ஆண்டு கல்விக் கட்டணத்தை, 90 ஆயிரம் ரூபாயில் இருந்து, இரண்டு லட்சம் ரூபாயாக உயர்த்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.

கட்டண விலக்கு:

அதே நேரத்தில், எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினர், மாற்றுத் திறனாளிகள், பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு, முழு கட்டண விலக்கு அளிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த கட்டண விலக்கு முடிவை, பல்வேறு தரப்பின ரும் வரவேற்றுள்ளனர். தகுதி யிருந்தும், பொருளாதார காரணங்களால், ஐ.ஐ.டி.,யில் சேர முடியாமல் தவித்த மாணவர்களுக்கு இந்த முடிவு வரப்பிரசாதம் என, கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

முக்கிய முடிவுகள்: 

வரும் கல்வி ஆண்டு முதல், இளங்கலை பட்டப் படிப்புக்கான, ஆண்டு கல்விக் கட்டணம், 90 ஆயிரம் ரூபாயில் இருந்து, இரண்டு லட்சம்ரூபாயாக உயர்த்தப்படுகிறதுஏற்கனவே, படிக்கும் மாணவர்களுக்கு, முந்தைய கல்விக் கட்டணமே தொடரும்எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினர், மாற்றுத் திறனாளிகள், ஒரு லட்சத்துக்கும் குறைவான ஆண்டு வருமானம் உள்ளோர், முழு கட்டண விலக்கை கோரலாம்.

ஆண்டு வருமானம், ஐந்து லட்சம் ரூபாய்க்கும் கீழ் உள்ளோர், கல்விக் கட்டணத்தில், மூன்றில் இரண்டு பங்கு விலக்கு கோரலாம் இந்தப் பிரிவுகளின் கீழ் வராதவர்கள், கல்விக் கடன் பெற உதவி செய்யப்படும்.

மிகச் சிறந்த முடிவு:
 

எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினர், பொருளாதார ரீதியில் பின்தங்கியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டண விலக்கு அளித்துள்ளது மிகவும் விவேகமான சிந்தனை. படிக்க இடம் கிடைத்தும், பணம் செலுத்த முடியாமல் திணறிய குடும்பங்களின் கவலையை உணர்ந்து, இந்த அரசு சரியான முடிவை எடுத்துள்ளது.- ஆனந்த் குமார் கணிதவியலாளர், சூப்பர் - 30 நிறுவனர்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us