தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/10ம் வகுப்பு அறிவியல் தேர்வு; சென்டம் எண்ணிக்கை சரியும்

10ம் வகுப்பு அறிவியல் தேர்வு; சென்டம் எண்ணிக்கை சரியும்

10ம் வகுப்பு அறிவியல் தேர்வு; சென்டம் எண்ணிக்கை சரியும்


UPDATED : ஏப் 08, 2016 12:00 AM

ADDED : ஏப் 08, 2016 11:58 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 08, 2016 12:00 AM ADDED : ஏப் 08, 2016 11:58 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சேலம்
: பத்தாம் வகுப்பு அறிவியல் பாடத்தில் மாற்றம் செய்யப்பட்ட நிலையில்
, நேற்று நடந்த அறிவியல் தேர்வில், பாடத்தின் உள்பகுதியிலிருந்து கேள்விகள் கேட்கப்பட்டிருந்ததால், சென்டம் வாங்குபவர்களின் எண்ணிக்கை குறையும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் சமச்சீர் கல்வி முறை அமல்படுத்தப்பட்ட பின், பத்தாம் வகுப்பு அறிவியல் பாடத்தில் செய்முறை தேர்வு புகுத்தப்பட்டது. இதனால், பொதுத்தேர்வில், 75 மதிப்பெண்களுக்கு மட்டுமே வினாத்தாள் வடிவமைக்கப்பட்டது. கடந்த கல்வியாண்டில், அறிவியல் வினாத்தாள் மிகவும் எளிதாக கேட்கப்பட்டதால், எப்போதும் இல்லாத அளவுக்கு சென்டம் வாங்கியவர்களின் எண்ணிக்கை, ஒரு லட்சத்தை தாண்டியது. இதை குறைக்க, புத்தகத்தின் பின்பகுதியில் வினாக்கள் அதிகரிக்கப்பட்டது. 

உதாரணமாக, 5 மதிப்பெண் வினாக்கள், 25 லிருந்து, 108 ஆக உயர்த்தப்பட்டது. இதனால், புத்தகத்தின் உள்பகுதியிலிருந்து வினாக்கள் தேர்வுக்கு வராது என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், நேற்று நடந்த அறிவியல் வினாத்தாளில், பாடத்தின் உள்பகுதியிலிருந்து, ஐந்து மதிப்பெண் மற்றும், ஒரு மதிப்பெண் வினாக்கள் இடம்பெற்றிருந்தன. 

அதிலும், ஐந்து மதிப்பெண்ணில், வேதியியல் பிரிவில் சாய்ஸ் கேள்வியும் உள்பகுதிலிருந்தே கேட்கப்பட்டதால், பல மாணவர்கள் திணறினர். தேர்வு எளிதாக இருந்தாலும், சென்டம் பெறுபவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறையும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us