தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஆற்றல்சார் பல்கலை.,வளர்ச்சியை நோக்கி பெரியார் பல்கலை!

ஆற்றல்சார் பல்கலை.,வளர்ச்சியை நோக்கி பெரியார் பல்கலை!

ஆற்றல்சார் பல்கலை.,வளர்ச்சியை நோக்கி பெரியார் பல்கலை!


UPDATED : ஏப் 09, 2016 12:00 AM

ADDED : ஏப் 09, 2016 11:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 09, 2016 12:00 AM ADDED : ஏப் 09, 2016 11:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சேலம்
: சேலம் பெரியார் பல்கலைக்கழகத்துக்கு
, மத்திய அரசு சிறப்பு ரேங்க் அளித்துள்ளது. 

ஆற்றல்சார் பல்கலைக்கழமாக மாற்றுவதே தன்னுடைய நோக்கம் என பல்கலை துணைவேந்தர் சுவாமிநாதன் தெரிவித்தார். 

சேலத்தில்,
அவர் நிருபர்களிடம் கூறியதாவது: 

சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் உள்ள லட்சக்கணக்கான மாணவ மாணவியருக்கு, பெரியார் பல்கலைக்கழகம் கல்வியை வழங்கி வருகிறது. கற்றல், கற்பித்தலில் புதுமை, வளர்ச்சி, வேலைவாய்ப்பை ஏற்படுத்தும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ள புதிய துறைகள், ஆராய்ச்சி கூடங்கள், மாணவர்கள் பயன்பாட்டுக்கான உள்கட்டமைப்பு வசதிகள், சிறந்த நிர்வாகம், குறுகிய காலத்தில் தேர்வு முடிவுகள் வெளியீடு, சர்வதேச கருத்தரங்குகள் என இந்திய அளவில் சிறந்த பல்கலையாக பெரியார் பல்கலைக்கழகம் விளங்குகிறது.

இதன் பயனாக, மத்திய மனிதவள மேம்பாட்டு துறை, நாடு முழுவதும் உள்ள, 722 பல்கலைக்கழகங்களை ஆய்வு செய்ததில், சேலம் பெரியார் பல்கலைக்கு, 47வது இடமும், மாநில அளவில் ஏழாவது இடமும், 20 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான கல்வியில், தமிழகத்தில் முதலிடத்தையும் பிடித்துள்ளது. 

மூன்று கோடி ரூபாய் மதிப்பில், அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்துறையின் நானோ ஆராய்ச்சிப் பணிகளுக்காக ஆராய்ச்சி திட்டவடிவம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ராணுவ பாதுகாப்பு ஆராய்ச்சியை மேற்கொள்ள, பாரதியார் பல்கலையும், பெரியார் பல்கலையும் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யும் நடவடிக்கையை எடுத்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us