UPDATED : ஏப் 11, 2016 12:00 AM
ADDED : ஏப் 11, 2016 10:59 AM
கோவை
:
கோவை ஸ்ரீகிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் பட்டமளிப்பு விழா, நடந்தது.
கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரி வளாகத்தில் நடந்த விழாவில், மூன்று கல்லுாரிகளை சேர்ந்த இளங்கலை, முதுகலை, பிஎச்.டி., முடித்த, 2,138 மாணவர்களுக்கு பட்ட சான்றிதழ்கள் வழங்கப்பட்டன; பல்கலை ரேங்க் பெற்றவர்களுக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டன. இதில், கிருஷ்ணா கல்விக் குழுமங்களின் நிர்வாக அறங்காவலர் மலர்விழி தலைமை வகித்தார்.
வேலுார் தொழில்நுட்ப பல்கலை வேந்தர் விஸ்வநாதன் பட்ட சான்றிதழ்கள் வழங்கி பேசுகையில், எந்த நாடு கல்விக்கு அதிக முக்கியத்துவம் தந்துள்ளதோ, அந்த நாடு வளர்ந்துள்ளது. ஆனால், இந்தியா பள்ளி கல்வித் தரத்தில் பின்தங்கியுள்ளது. உயர் கல்வியை பொறுத்தவரை, இன்று நாம் அதிக அக்கறை செலுத்த வேண்டும், என்றார்.
கிருஷ்ணா மேலாண்மைக் கல்லுாரி இயக்குனர் ராமகிருஷ்ணன், பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரி முதல்வர் அண்ணாதுரை, கிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லுாரி முதல்வர் ரமேஷ், முதன்மை நிர்வாக அலுவலர் சுந்தரராமன், பேராசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் பங்கேற்றனர்.
