UPDATED : ஏப் 12, 2016 12:00 AM
ADDED : ஏப் 12, 2016 10:56 AM
அ நிறம் | அளவு
சோழவந்தான்
: சோழவந்தான்
சி.எஸ்.ஐ., துவக்கப்பள்ளி ஆண்டு விழா தாளாளர் ஞானஆனந்தராஜ்
தலைமையில் நடந்தது.
பேரூராட்சித் தலைவர் பாண்டியம்மாள், துணைத் தலைவர் கணேசன் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் ராபின்சன்செல்வக்குமார் வரவேற்றார். ஆசிரியை பிரேம்குமாரி அறிக்கை வாசித்தார். முன்னாள் மாணவர் குபேந்திரன் துவக்கி வைத்தார்.
கவுன்சிலர் புஷ்பம், வெற்றிலை கொடிக்கால் கூட்டுறவு விவசாய சங்க உதவி செயலாளர் சரவணன் பேசினர். சிறந்த மாணவர்களுக்கு ஆசிரியர் பிராங்கலின் நினைவு தங்கப்பதக்கம் வழங்கப்பட்டது. உதவி தொடக்கக் கல்வி அலுவலர் சீனிவாசன், கூடுதல் அலுவலர் மணிமேகலை, வள மைய மேற்பார்வையாளர் சோபியா பங்கேற்றனர். ஆசிரியை லதா நன்றி கூறினார்.
