UPDATED : ஏப் 12, 2016 12:00 AM
ADDED : ஏப் 12, 2016 10:59 AM
அ நிறம் | அளவு
மதுரை
: மதுரை
மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் தேர்வை 44,745 மாணவர்கள் நேற்று எழுதினர். 539 பேர் தேர்வுக்கு வரவில்லை.
தேர்வு மையங்கள் இணை இயக்குனர் சசிகலா, முதன்மை கல்வி அலுவலர் ஆஞ்சலோ இருதயசாமி தலைமையில் கண்காணிக்கப்பட்டன.
சென்டம் எளிதா:
வழக்கம் போல் இத்தேர்விலும் மாணவர்கள் எளிதில் சென்டம் எடுக்க முடியாத வகையில் ஒரு மதிப்பெண் வினா பகுதியில் இரண்டு வினாக்கள் மிக கடினமாக கேட்கப்பட்டன. இதனால் சென்டம் எடுப்பது கடினம் என ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
