தனியார் பள்ளியில் சேர்க்கை; மே 3ல் விண்ணப்பம் வழங்கல்
தனியார் பள்ளியில் சேர்க்கை; மே 3ல் விண்ணப்பம் வழங்கல்
UPDATED : ஏப் 13, 2016 12:00 AM
ADDED : ஏப் 13, 2016 10:31 AM
கரூர்
: கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தில் தனியார் பள்ளிகளில், 25 சதவீத சேர்க்கைக்கு வரும், மே 3ம் தேதி முதல் விண்ணப்பம் வழங்கப்படும் என, முதன்மை கல்வி அலுவலர் ராமசாமி
தெரிவித்தார்
அவர் வெளியிட்ட அறிக்கை: மத்திய அரசின் இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டப்படி, தனியார் சுயநிதி பள்ளிகளில் ஏழை குழந்தைகளுக்கு நுழைவுநிலை வகுப்புகளில் குறைந்தபட்சம், 25 இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது.
இதன்படி, வரும் கல்வியாண்டில் சிறுபான்மையற்ற தனியார் சுயநிதிப் பள்ளிகளில் நுழைவுநிலை வகுப்புகளில் குழந்தைகளை சேர்க்க விரும்பும் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகம், மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலகம், மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் அலுவலகம், உதவித் தொடக்கக் கல்வி அலுலவர் அலுவலகங்கள், அனைத்து சிறுபான்மையற்ற தனியார் சுயநிதிப் பள்ளி அலுவலகங்கள் ஆகிய இடங்களில் வரும் மே, 3ம் முதல், 18ம் தேதி வரை விண்ணப்பங்களை இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்.
பூர்த்தி செய்த விண்ணப்பங்களை உரிய ஆவண நகல்களின் இணைப்புகளுடன், மே, 18ம் தேதி மாலை, 5 மணிக்குள் விண்ணப்பங்களை அளிக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
