தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மலிவு விலை காது கேட்கும் கருவி இந்திய மாணவன் சாதனை

மலிவு விலை காது கேட்கும் கருவி இந்திய மாணவன் சாதனை

மலிவு விலை காது கேட்கும் கருவி இந்திய மாணவன் சாதனை


UPDATED : ஏப் 13, 2016 12:00 AM

ADDED : ஏப் 13, 2016 10:36 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 13, 2016 12:00 AM ADDED : ஏப் 13, 2016 10:36 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஹூஸ்டன்
: அமெரிக்காவின் கென்டகி மாகாணத்தில் உள்ள லுாயிஸ்வில்லி நகரில் வசிக்கும் மாணவன்
, முகுந்த் வெங்கடகிருஷ்ணன். இந்தியாவின் பெங்களூரு தான், இவரது பூர்வீகம். இரண்டு ஆண்டுகளுக்கு முன், தாத்தா - பாட்டியை பார்ப்பதற்காக பெங்களூரு வந்தார்.

தாத்தாவுக்கு காது கேட்காத காரணத்தால், மருத்துவரிடம் அழைத்துச் சென்றுள்ளார். அவரை பரிசோதித்த மருத்துவர், காது கேட்கும் கருவியை பொருத்த வேண்டும் எனக் கூற, கடைக்கு சென்று விசாரித்த போது, அது, விலை அதிகமாகவும், பொருத்துவது சிக்கலானதாகவும் இருந்துள்ளது. ஊர் திரும்பிய அவர், இதற்கு மாற்று கண்டுபிடிக்க வேண்டும் என்ற உந்துதலுடன், தீவிர ஆராய்ச்சியில் இறங்கினார். 

விளைவு, கம்ப்யூட்டர் ப்ராசசர் போன்ற ஒரு உபகரணத்தை கண்டுபிடித்தார். இதன் விலை, வெறும், 4,000 ரூபாய் தான். அதேசமயம், சந்தையில் விற்பனையாகும் கருவிகளின் விலையோ, 66,500 ரூபாய். இந்த கருவியை, கென்டகி மாகாண அறிவியல் மற்றும் பொறியியல் கண்காட்சியில் காட்சிக்கு வைத்தார். 

அக்கருவி முதல் பரிசை தட்டிச் சென்றது. இதையடுத்து, மாணவனின் கண்டுபிடிப்பை உற்பத்தி செய்து, வினியோகிக்க, பல நிறுவனங்கள் முன்வந்துள்ளன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us